டிஆர்பிக்காக நீ இப்படிலாம் கூட பேசுவியா… அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், அபிஷேக் , மக்கள் எனக்கு பிச்சைப்போட்டு மீண்டும் இங்கே என்னை அனுப்பி இருக்காங்க, அவங்க எதிர்பார்க்கும் சுவாரசியத்தை என்னை கொளுத்திக்கொண்டு கொடுப்பேன் என்று கூறுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர்.

சண்டை

சண்டை

பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தம்பியா பழகிய அண்ணாச்சி நிரூப் நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாச்சியின் தலைவர் பதவியை நாணயத்தை பயன்படுத்தி நிரூப் பறித்துகொண்டதால் அண்ணாச்சி கலங்கிப்போனார். இதையடுத்து, இரண்டு நாளாக வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், அபிஷேக், நிரூப்பிற்கு அறிவுரை கூறுகிறார். பாவ்னியை இந்த வாரம் காயினை யூஸ் பண்ண சொல்லிட்டு, அண்ணாச்சி ஹர்ட் பண்ணாம அடுத்த வாரம் நீ கேப்டன் ஆகி இருக்கலாம். அன்பு கொடுப்பதில் லாஜிக் பாக்குறியா. நான் இருக்கும் போதும் நிரூப், பிரியங்கா பத்தி பேசுனாங்க இப்போ 60 நாள் ஆய்டுச்சி இப்பவும் அதே தான். மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க, அவங்க எதிர்பார்க்கும் சுவாரசியத்தை என்னை கொளுத்திக்கிட்டு கொடுப்பேன்டா என்று கூறுகிறார் அபிஷேக்.

இந்த வாரம் நீதான்

இந்த வாரம் நீதான்

இந்த ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள், என்னது..நீ கொளுத்திட்டு மக்களுக்கு சுவாரஸ்யம் கொடுப்பியா? முதல்ல இந்த வார எவிக்ஷ்னிலிருந்து தப்பிக்கிறயான்னு பாருடா ஈர வெங்காயம். விஜய்டிவி டிஆர்பிக்காக வேணும்னா உன்னை உள்ள இருக்க வச்சு இந்த வாரம் வேற யாரையாவது பலி கொடுப்பானுகளே தவிர மக்கள் உன்னை என்றுமே ஏத்துக்க மாட்டாங்கடா...பேப்பயலே. என பதிவிட்டுள்ளார்.

இன்னும் 33நாள் தான்

இன்னும் 33நாள் தான்

3வது ப்ரோமோவில் அபிஷேக் கூறிய கருத்தால்,காண்டான ஒரு நெட்டிசன், மக்கள் மூணு வாரத்தில் அனுப்பியாச்சு இவரை, என்னமோ மக்கள் போட்ட பிச்சையில் உள்ளே வந்தேன் என்கிறான். சரி சரி மூணு நாள் மட்டும் தான் இருக்கு முடிஞ்சா சுவாரஸ்யம் கொடுப்பதாக கனவு கண்டுகொண்டு இரு...சனிக்கிழமை வரை.. என பதிவிட்டுள்ளார்.

முழுப்பைத்தியம்

முழுப்பைத்தியம்

ஒரு நெட்டிசன், உண்மையில் மொபைல், டிவி, கடிகாரம் எதுவுமே இல்லாமல் வீட்டில் கொஞ்சம் மனசு பாதிக்கப் பட்டு இருப்பார்கள் என்பது உண்மைதான் ஆனால் முழுப் பைத்தியமாக மாறுவார்கள் என்று அபிஷேக் ஐ பார்த்து புரிந்து கொண்டேன் பத்து நிமிட புகழுக்கு ஆசைப்பட்டு என்னா வாய் பேசுகிறார் ஈர வெங்காயம்... என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Pavani கிட்ட Thamarai ஒரு மணி நேரம் என்ன பேசினார் | Bigg Boss 5 Tamil Day 58 Mini's View
இந்த வாரம் நீ தான்

இந்த வாரம் நீ தான்

மற்றொரு இணையவாசி, அபிஷேக்கு இந்த வாரம் நீ அதோ கதிதான்!.. சும்மா படம் காட்டாதே. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X