Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சொந்த ஸ்டோரி சொல்ல சென்னா.. துப்பாக்கி விஜய் மொட்டை மாடி சீன் சொல்றாப்ல.. ட்ரோலாகும் அபிஷேக்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது ஸ்டோரியை கூறிய அபிஷேக்கை ட்ரோலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கே நடைபெற்றது. இதில் அபிஷேக் ராஜா தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்.
கெட்ட வார்த்தைய கத்துக்கவே 6 மாசம் ஆயிடுச்சு.. காலேஜ்ல பொறுக்கி ஆயிட்டேன்.. ஓபனா பேசிய சிபி!
தனது அப்பா வாங்கி வைத்த கடனை 2 வருடத்தில் உழைத்து சரிக்கட்டியதாக கூறினார் அபிஷேக் ராஜா. அபிஷேக் ராஜா பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
துப்பாக்கி பட மொட்டை மாடி கதை
அந்த வகையில் அபிஷேக் ராஜா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அபிஷேக்கோட சொந்த கதையை சொல்ல சொன்னா, துப்பாக்கி படத்துல விஜய்யோட மொட்டை மாடி சீன் சொல்கிறாரே என பதிவிட்டுள்ளார்.
விசு மாதிரி பேசிட்டு சிவாஜியாம்
அபிஷேக் ராஜா பேசியதை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் விசு மாதிரி பேசிட்டு சிவாஜியாம்.. என்னென்ன சொல்றான் பாரு என பதிவிட்டுள்ளார்.
டிஆர்க்கு டஃப் கொடுப்பான் போல
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் டிஆர்க்கு டஃப் கொடுப்பான் போல பேசுறதுல என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
கொஞ்சம் இரிட்டேட்டிங்காதான் இருக்கு
இந்த நெட்டிசன், பிக்பாஸ் சீசன் 5ல் மக்கள் ஏன் அபிஷேக்கை அதிகம் வெறுக்கிறார்கள்? நான் அவருடைய யூட்யூப் வீடியோக்களை அதிகம் பார்க்காமல் இருக்கலாம்... கொஞ்சம் இரிட்டேட்டிங்காதான் இருக்கு. ஆனால் இவ்வளவு வெறுப்பாளர்கள் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.. எனக்கு தெரியல.. என்று குறிப்பிட்டுள்ளார்.
டன் கணக்குல எல்லாம் நடிக்காதீங்க
மற்றொரு நெட்டிசனான இவர், அடேய் அபிஷேக் ராஜா, அவன் உருட்டுன உருட்ட கூட ஏத்துக்குவேன்டா..
ஆனா அந்த உருட்டுக்கும் நீங்க எல்லாம் அழுகுறீங்க பாரு அந்த உருட்டை தாண்டா என்னால ஏத்துக்கவே முடியல
நடிங்க அதுக்குன்னு இப்படி டன் கணக்குல எல்லாம் நடிக்காதீங்கடா என குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப்படை சத்யராஜோனு தோனுது
மற்றொரு நெட்டிசனான இவர், அபிஷேக் கதை சொல்லும்போது டிஆர் மேனரிசம் தெரிந்தது. தாமரை கொஞ்சம் அமைதிப்படை சத்யராஜோனு தோனுது என பதிவிட்டுள்ளார்.
என்ன பேய் கதை சொல்ற
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் ராஜா என்ன என்ன பேய் கதை சொல்றடா நீ.. என கேட்டு கிண்டலடித்துள்ளார்.