ஏன் இவ்வளவு அவசரம் பிக்பாஸ்.. இந்த வாரம் முழுக்க வாட்டர் சர்வீஸ்தான்..புரமோவால் காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரமே அழுகாச்சியை ஆரம்பித்து விட்டீர்களா என திட்டி தீர்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
இதில் கடந்த சீசன்களில் எல்லாம் கொடுக்கப்பட்ட அதே அழுகாச்சி டாஸ்க்குதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையையும் தங்களின் அனுபவங்களையும் ஷேர் செய்து கொள்ள வேண்டும்.

கண்ணீர் சிந்துவார்கள்
இந்த டாஸ்க்கில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களின் சோகக் கதையை சொல்லுவார்கள். இதனைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ் கண்ணீர் விடுவதோடு பார்வையாளர்களும் கண்ணீர் சிந்துவார்கள். இதனால் இந்த டாஸ்க்கை அழுகாச்சி டாஸ்க் என்று விமர்சிப்பார்கள் நெட்டிசன்கள்.

டிரெஸ் இல்லாமல்
இந்நிலையில் இன்றைய புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் முதல் நபராக பேசும் இசைவாணி தான் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டது, போட்டுக்கொள்ள டிரெஸ் இல்லாமல் கஷ்டப்பட்டது, மற்றும் சாப்பாடு இல்லாமல் இருந்தது பற்றியெல்லாம் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
Recommended Video

செம கடுப்பு
இசைவாணி பேசுவதை கேட்டு சக ஹவுஸ்மேட்ஸும் கண்ணீர் விட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர். அதற்குள் என்ன அவசரம் இந்த அழுகாச்சி டாஸ்க்கை கொடுக்க என கேட்டு விளாசி வருகின்றனர்.

எல்லாருக்கும் சோகம் இருக்கும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அழுகை வாரம்..
எல்லாரோட ஸ்டோரிளையும் கண்டிப்பா கஷ்டம் இருக்கும்.
ஏன் இப்ப ஷாருக்கான கூட சோக கதையை சொல்லுவார்.
சோகத்தை மறக்கணுமே தவிர அதை ஞாபக படுத்துறது தேவையே இல்ல.. இந்த டாஸ்க் எல்லாம் தேவை இல்லாத ஆணி... தப்பா இருந்தா மன்னிக்கவும் என கூறியுள்ளார்.

வேறு வழியில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாமும் அழுவதை தவிர வேறு வழி இல்லை! என கிண்டலடித்துள்ளார்.

அப்புறம் அடிதடி வரும்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதல்ல சோகக்கதை வரும் அப்புறம் அடிதடி வரும் உஷாருய்யா! என கடந்த சீசன்களை வைத்து கூறியுள்ளார்.

சோகக்கதை சொல்வாங்க பாரு!
பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் எபிசோடுக்கான இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்ப அத்தனை பேருமே சோகக்கதை சொல்வாங்க பாரு! என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் பிக்பாஸ் இவ்வளவு அவசரம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ரவுண்டு அடுத்த வாரம்தான் வரும் என்று நினைத்தேன். ஏன் பிக்பாஸ் இவ்வளவு அவசரம் என கேட்டுள்ளார்.

இதை வச்சு நாமினேஷன்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போல்லாம் முதல் வாரம் வச்சுட்டு இதை வச்சு நாமினேஷனுக்கு ஆள் எடுப்பாங்க.... போன சீசன் அதான் பண்ணாங்க என பதிவிட்டுள்ளார்.

இப்படித்தான் நடத்துவீங்களா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய்... விஜய் டிவி... இந்த முறையும் சீரியல் மாதிரித்தான் கொண்டு போக போறான்... இப்படியே போனா சர்வைவர் பார்க்க போயிடுவாங்க எல்லாரும். ஒரு போட்டி இருந்தும் இப்படித்தான் நடத்துவீங்களா? என கேட்டுள்ளார்.

இதுக்கு பிஜிஎம் வேற..
மற்றொரு நெட்டிசனான இவர், இங்க எல்லாருக்கும் கஷ்டம் இருக்கும்... கஷ்டம் இல்லாதவங்க யாரும் இல்ல... இதெல்லாம் ஒரு டாஸ்க்கா அடேய் பிக் பாஸ் என்னடா பித்தலாட்டம் இதெல்லாம்... இதுக்கு பிஜிஎம் வேற.. என கிண்டலடித்துள்ளார்.

வாட்டர் சர்வீஸ்தான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சிம்பத்தி டாஸ்க்தான், வேணாம்னு சொன்னோமே.. ஸ்ப்பா... முதல் வாரம் முழுக்க வாட்டர் சர்வீஸ்தான்... சேம் டெம்ப்ளேட்.. வித்தியாசமான கதைகள்... ஹா ஹா ஸ்டார்ட் மியூஸிக்.. என மியூஸிக் போட்டு கலாய்த்துள்ளாரர்.


Click it and Unblock the Notifications











