ஒரு மாற்றமும் ஏற்படாது ஆண்டவரே.. யார அனுப்புவீங்கன்னு தெரியும்.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கமல் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளையும் பார்வையாளர்களையும் சந்திக்கிறார்.
இதற்கான முதல் புரமோவில் பேசும் கமல், 15 பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் உங்களுடைய வாக்குகள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பார்ப்போம் என கூறுகிறார்.

ஒருமாற்றமும் ஏற்படாது ஆண்டவரே
புரமோவை பார்த்த நெட்டிசன்கள், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் நீங்கள் எப்படியும் வயதான ஒரு போட்டியாளரைதான் முதலில் வெளியேற்றுவீர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒருமாற்றமும் ஏற்படாது ஆண்டவரே.. பிக்பாஸ் வீட்டிற்கு யாரும் வரவில்லை! பிக்னிக் ஸ்பாட்டுக்குதான் வந்துயிருக்கிறார்கள்! என கூறியுள்ளார்.

பிக்பாஸ் எப்பண்ணே ஆரம்பிக்க போகுது?
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் எப்பண்ணே ஆரம்பிக்க போகுது?... இத்தனை நாளும் "சும்மா" தானா? என கேட்டுள்ளார்.

ஊட்டியிலிருந்து நேரா வந்துட்டீங்க போல
புரமோவில் கமல்ஹாசன் அணிந்திருக்கும் உடையை பார்த்த இந்த நெட்டிசன், என்ன நம்மவரே... ஊட்டியிலிருந்து நேராக பிக்பாஸ் செட்டுக்கு வந்துட்டீங்க போல... ஆமா... எதுக்கு வந்து இருக்கீங்க? என கேட்டுள்ளார்.

இதுல என்ன மாற்றம்?
இன்றைய புரமோவுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படி இருந்தாலும் வயசான கன்டெஸ்டன்ட் தான் வெளிய அனுப்புவீங்க.. இதுல என்ன மாற்றம் அப்படி இப்படினு ஆண்டவரே என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சின்ன பொண்ணு தான் வெளியேற போகிறார்
இன்றைய புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரெண்டு எபிசோட் பேசி ஆகணுமே....
எப்படியும் சின்ன பொண்ணு தான் வெளியேற போகிறார்... என ஆருடம் கூறியுள்ளார்.

பிக்பாஸ் இல்ல பிரியங்கா பாஸ்
பிக்பாஸ் குறித்து டிவிட்டியுள்ள இந்த நெட்டிசன், ஒவ்வொரு நாளும் சுமார் 70 சதவிகித காட்சி பிரியங்கா மட்டுமே நீக்கமற நிறைந்து இருக்கிறார்.... அதனால் இது பிக்பாஸ் அல்ல...
பிரியங்கா பாஸ்.... டிவியின் சொந்த புராடெக்ட் என்பதற்காக இந்த அளவுக்கா முக்கியத்துவம்... இப்படி இருந்தால்
மற்றவர்கள் காணாமல் போகும் நிலைமை தான்... என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











