வந்த வேகத்தில் குடையை உடைத்த நிரூப்... இசைவாணிக்கு தண்ணீர் டேப்பை திறக்க கற்றுக்கொடுத்த அண்ணாச்சி!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே நிரூப் பிக்பாஸ் வீட்டின் குடையை உடைத்துவிட்டு விழி பிதுங்கி நின்றார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் எபிசோட் இன்று ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

பிஞ்சுப்போன குடை

பிஞ்சுப்போன குடை

இதில் வந்த முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குடையை எடுத்து பேட்டிங் செய்வது போல் சுழற்றினார் நிரூப். அவர் வீசிய வேகத்துக்கு குடை பிய்த்துக்கொண்டு போனது.

இன்னைக்கு டாஸ்க்

இன்னைக்கு டாஸ்க்

இதனால் பதறி போன நிரூப் குடை பிஞ்சுடுச்சு என சக போட்டியாளரான நடிகர் அபினயிடம் கூறி பம்மினார். பின்னர் இன்று இரவு டாஸ்க் இந்த குடையை சரி செய்வதுதான் என்று கூறிவிட்டு குடையுடன் புறப்பட்டார் நிரூப்.

யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுத்த நிரூப்

யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுத்த நிரூப்

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிருப் நந்தகுமார் நடிகை யாஷிகாவின் முன்னாள் காதலர் என கூறப்படுகிறது. யாஷிகா சோஷியல் மீடியாவில் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது அவரை கட்டியணைத்து லிப்லாக் முத்தம் கொடுத்தார் நிரூப்.

இணையத்தில் வலம் வரும் போட்டோ

இணையத்தில் வலம் வரும் போட்டோ

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல் யாஷிகா ஆனந்தும் நிரூப்பும் நெருக்கமாக இருந்த போட்டோக்களுக்கும் அவர் பிக்பாஸில் பங்கேற்றுள்ளதால் தற்போது இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிலே தண்ணீர் வரும்

எதிலே தண்ணீர் வரும்

இதனை தொடர்ந்து எந்த டேப்பில் சுடு தண்ணீர் வரும் எந்த டேப்பில் சில் தண்ணீர் வரும் என தெரியாமலும் எப்படி திறப்பது என்று தெரியாமலும் தவித்து கொண்டிருந்தார் கானா இசைவாணி. அவருக்கு தண்ணீர் டேப்பை திறப்பது குறித்தும் எதில் சுடு தண்ணீர் வரும் எதில் சில் தண்ணீர் வரும் என்றும் விளக்கினார் இமான் அண்ணாச்சி.

கச்சேரி களைக்கட்டும்

கச்சேரி களைக்கட்டும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் என்பதால் படு ஜாலியாக உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ். போக போகதான் பிக்பாஸ் வீட்டுக்குள் கச்சேரி களைக்கட்டும் என தெரிகிறது. இம்முறை பெரும்பாலும் தெரியாத முகங்களாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு போட்டியாளர்களின் முகம் பெயரும் ரிஜிஸ்டர் ஆகவே ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X