அவ எப்படி இருக்கா… அப்பாவிடம் நலம் விசாரித்த நிரூப்… நெகிழ்ந்து போன ஃபேன்ஸ் !
சென்னை : பிக்பாஸ் 5வது சீசன் 80 நாட்களை எட்டிவிட்டது, இத்தனை நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
எல்லா சீசனிலும் முதல் பாதியில் ஏதாவது சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும், ஆனால் இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை.
போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். இன்று நிரூப்பின் தந்தை வீட்டிற்கு வந்தார்.

Freeze டாஸ்க்
பிக் பாஸ் சீசனில், இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. இதில், அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வந்திருந்தனர். அதே போல சிபியின் மனைவி மற்றும் அப்பா வந்திருந்தார்.

அவ எப்படி இருக்கா
Freeze டாஸ்கின் இரண்டாவது நாளானஇன்று நிரூப்பின் அப்பா வந்தார். அவரை போட்டியாளர்கள் உங்கார வைத்து பேசினார்கள். அப்போது அப்பாவிடம் தனியாக பேசிய நிரூப், யாஷிகா எப்படி இருக்கா என்று கேட்டார். என்னத்தான் யாஷிகா, நிரூப் பிரிந்து விட்டாலும் அவரை மறக்காமல் பல நேரத்தில் நிரூப் பேசி உள்ளார்.

மறக்காத நிரூப்
கடந்து வந்த பாதை டாஸ்கில் யாஷிகா மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது என்று நிரூப் கூறி இருந்தார். தற்போது அப்பா வீட்டிற்குள் வந்தவுடன் நிரூப் யாஷிகா பற்றியே கேட்டுள்ளார். இதனால் நிரூப்பின் பேன்ஸ் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

அன்பா இரு
பிக் பாஸ் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக , நிரூப்பிற்கு சில அறிவுரைகளை கூறினார். எல்லார் கிட்டையும் அன்பா பேசு, நட்பா பழகு என்றார், புடிச்சவங்க தப்பு பண்ணாலும். பிடிக்காதவங்க தப்புபண்ணாலும் ஒரே மாதிரி இரு என்றார்.
Recommended Video

பிலாஷபி பேசாதே
அக்ஷராவை பார்த்து அழாதேமா, இன்னும் 4 வாரம் தான் இருக்கு இந்த 4 வாரத்துல இனி நீ அழவே கூடாது என்றார். அனைவரும் நல்லா விளையாடுங்க என்றார். நிரூப் நீ பிலாஷபி எல்லாம் பேசிட்டு இருக்காதே ஒழுங்கா விளையாடு என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார்.


Click it and Unblock the Notifications











