உனக்கு ஒருத்தரை பிடிக்கலனா.. அவங்களை சாக்கடையில் தள்ளிடுவா.. பிரியங்காவை திட்டி தீர்த்த நிரூப்!
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 78 நாட்களை நிறைவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை, நமீதா மாரிமுத்து , நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில் குறைவான வாக்குகளை பெற்ற அபிநய் வெளியேற்றப்பட்டார்.

10 போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் தற்போது, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் சற்று உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர்.

தலைவர் பதவிக்கான போட்டி
வாரத்தின் முதல் நாள் என்பதால், இன்று தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில்,போட்டியாளர்களுக்கு ஒரு கயிறு கொடுக்கப்படுகிறது. அந்த கயிற்றை இறுதி வரை யார் விட்டுவிடாமல் விளையாடுகிறார்களோ அவர்களே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர்.

ப்ளீஸ் விட்டு கொடுங்க
கயிற்றை வைத்திருந்த போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக போட்டியிலிருந்து விலகிவிட,தாமரை,அமீர் மற்றும் நிரூப் 3 பேர் மட்டும் இருந்தனர். அப்போது நிரூப், எனக்கு இந்த வாரம் வெளியில் போய்விடுவேன் என்று பயமா இருக்கு ஆகையால் இந்த முறை எனக்கு விட்டுக்கொடுக்குமாறு அமீர் மற்றும் தாமரையிட கேட்டார்.

மீண்டும் சண்டை
அப்போது குறுக்கிட்ட பிரியங்கா, தாமரை அவன் சொல்வதை நம்பாதே பயமா இருக்குனு சொல்வது அவனுடைய யுக்தி என்றார். பிரியங்காவின் பேச்சால் காண்டானா நிரூப், எந்த பிரச்னை நடக்கும் போதும் சரியோ... தவறோ.. உன் வாய்ஸ் இருக்க வேண்டும் என பேசுகிறாய் நான் ஒரு முறையாவது தலைவர் பதவியை ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறேன். இது எங்கள் மூவருக்கும் இடையிலான பிரச்சனை இதில் ஏன் பிரியங்கா நீ வர என கேட்டு நிரூப் கத்துகிறார்.
Recommended Video

உனக்கு என்ன பிரச்சனை
அதற்கு பிரியங்கா, நான் அவளிடம் பேசுகிறேன், உனக்கு என்னடா பிரச்சனை? எனக் கேட்கிறார். இதனை கேட்ட நிரூப், நீ ஒரு செல்பிஷ், ஈவில், அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீ தான், உனக்கு ஒருத்தரை பிடிக்கலனா... அவங்களை சாக்கடையில் தள்ளிவிடுவா... உனக்கு அப்படி ஒரு கேவலமான புத்தி என பயங்கரமாக திட்டி விட்டு போட்டியை விட்டு வெளியேறினார் நிரூப். இதையடுத்து தாமரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரானார்.


Click it and Unblock the Notifications











