பிரண்ட்ஷிப் டிராமா… நிரூப் கேட்ட கேள்வி … கண்ணீர் விட்ட பிரியங்கா!

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று நிரூப் பிரியங்கா சண்டையால் வீடே ரணகளமாக இருந்தது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நிரூப், டாஸ்க் என்று வந்துவிட்டால் , அப்படியே அன்னியனாக மாறிவிடுகிறார்.

நேற்றை கேப்டன் பதவிக்கான டாஸ்கிலும் இதுதான் நடந்தது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

டாஸ்க் என்றால் புயலாக மாறும் நிரூப் நேற்றைய போட்டியின் போதும் அனலாக இருந்தார். எப்படியாவது கயிறை மற்றவர்களிடமிருந்து பறிப்பதில் குறியாக இருந்தார். அந்த நேரத்தில் நிரூப் பிரியங்கா இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பிரியங்கா கயிற்றை விட்டு போட்டியிவிலருந்து விலகினார்.

விட்டு கொடு

விட்டு கொடு

பின்னர் ஒருவர் பின் ஒருவராக கயிற்றை விட்டு விட, இறுதியில் அமீர், தாமரை, நிரூப் மட்டுமே இருந்தனர். அப்போது நிரூப், தாமரையிடம் இந்த முறை எனக்கு விட்டு கொடு, நான் வெளியில போய்டுவோனோனு பயமா இருக்கு என்றார். அப்போது மூக்கை நுழைத்த பிரியங்கா. டேய்... எப்பவுமே இதையே சொல்ற இது தான் உன் ஸ்டேடர்ஜியா என கேட்டார்.

கேவலமான புத்தி

கேவலமான புத்தி

மேலும், தாமரை கயிற்றை விட்டுவிடாதே அவன் பயமா இருக்குனு சொல்லியே ஏமாத்துரான் என்றார்.பிரியாவின் தொடர் வசை மொழியால் கடுப்பான நிரூப், பிரியங்கா, இது கேவலமான புத்தி நான் தாமரைக்கிட்ட பேசுகிறேன் நீ ஏன் வர, உனக்கு ஒருத்தரை பிடிக்க வில்லை என்றால் அவங்களை அப்படியே குழியில் தள்ளிவிடுவா உனக்கு அப்படி ஒரு கேவலமான புத்தி.

நீ ஒரு செல்பிஷ்

நீ ஒரு செல்பிஷ்

போன வாரம் தாமரையை பிடிக்காம இருந்தது அவங்களை வச்சி செஞ்ச.. இப்போ நான்.... பிரண்ட்ஷிப் பிரண்ட்ஷிப்னு சொல்லி டிராமா போடுறா, நீ ஒரு செல்பிஷ், ஈவில், அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீ தான், இதே அபிஷேக் மட்டும் இருந்து இருந்தால் ஜிலி ஜிலினு சூப்பர் சூப்பர் என்று பேசி இருப்பா என்று வாய்க்கு வந்ததை பேசினார் நிரூப்

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 21st December 2021 - Promo 3 | அம்மாவை நினைத்து கதறி அழுத Amir
கண்ணீர் வடித்த பிரியங்கா

கண்ணீர் வடித்த பிரியங்கா

நிரூப் வரம்பு மீறிய பேச்சால் மனம் நொந்துப்போன பிரியங்கா கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவருக்கு ஹவுஸ்மேட்டுகள் ஆறுதல் கூறினாலும் , அவர் அழுதபடியே இருந்தார். இந்த நேரத்தில் அபிஷேக் மட்டும் இருந்து இருந்தால் ஓரளவுக்கு பிரியங்காவை கண்ட்ரோல் பண்ணி இருப்பார். பாவம் பிரியங்கா எஞ்சி இருக்கும் நாளை எப்படி ஓட்டப்போகிறார் என்றும்,பிரியங்காவுக்கு இது தேவைதான் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X