புகைப்பிடிக்கும் அறைக்குள் சென்ற பாவனி… அப்போ… தம் அடிக்கும் பழக்கம் இருக்கா ?

சென்னை : விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 91 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் போடியாளர்களாக பங்கேற்றுள்ள பாவனி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி சர்ச்சை நாயகியாகவே உள்ளார்.

லவ் பண்றீங்களா?

லவ் பண்றீங்களா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் போட்டியாளரான அபிநய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அதேபோல் பாவனியும் திருமணமாகி கணவரை இழந்துள்ளார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகுவதை பார்த்த சக போட்டியாளரான ராஜு, அபிநய்யிடம் நீங்க பாவனிய லவ் பண்றீங்களா? என நேரடியாகவே கேட்டார்.

குறும்படம்

குறும்படம்

ராஜுவிடம் இருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய், என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று திகைத்துப்போனார். பின்னர் இல்லை என்று கூறினார். இதையடுத்து இந்த விஷயம் பூதாகரமானது. காதல் விவகாரத்தில் மவுனம் காத்து வந்த கமல் குறும்படம் போட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

முத்த விவகாரம்

முத்த விவகாரம்

இதையடுத்து வைல்டு கார்டு மூலம் வந்த அமீரும் பாவனியின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஆறுதல் கூறுவதாக கூறி நச்சுனு முத்தம் கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றினார். குடும்ப சந்திப்புக்கு பிறகு அமீர், பாவனி பக்கம் செல்லாமல் இருக்கிறார். மேலும் கடந்த வாரம் ஓப்பன் டாஸ்கிலும் பாவனியின் பெயரை நாமினேட் செய்தார்.

புகைப்பிடிக்கும் அறையில் பாவனி

புகைப்பிடிக்கும் அறையில் பாவனி

இந்நிலையில், நேற்று நிரூப் மற்றும் பாவனி இருவரும் சூட்கேஸில் வரும் பணத்தை யார் எடுப்பது என்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிரூப் எனக்கு 20 லட்சம் கொடுத்தாலும் வேண்டாம் எனக்கு பைனல் போகணும் அந்த வெறி மட்டும்தான் எனக்குஇருக்கு என்றார். இவ்வாரு இருவரும் பேசிக்கொண்டே புகைப்பிடிக்கும் அறைக்குள் சென்றனர். நிரூப் நிற்பது மட்டும் அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்தது. ஆனால், உள்ளே சென்ற பாவனி பேசும் சத்தம் மட்டுமே கேட்டது.

Recommended Video

Bigg Boss விட்டு வந்ததும் Varun & Akshara சென்ற முதல் இடம்!! | Akshara Reddy, Varun in Gurukulam
அந்த பழக்கம் இருக்கா?

அந்த பழக்கம் இருக்கா?

இதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், ஓ... பாவனிக்கு தம் அடிக்கும் பழக்கம் இருக்கா ? நிரூப் புகைப்பிடிக்கும் போது மற்றவர்கள் வெளியில் இருந்துதான் பேசுவார்கள். அந்த பழக்கம் இல்லை என்றால் பாவனி ஏன் புகைப்பிடிக்கும் அறைக்குள் சென்றார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X