இப்படி நடுவுல விட்டுட்டு போய்ட்டாரு.. என் புருஷன் செத்தப்போ அழுகை வரல.. நெகிழ வைக்கும் பாவனி ரெட்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போட்டியாளர்கள் தங்கள் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அழ வைத்த நமிதா மாரிமுத்து
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பேசிய நமீதா மாரித்து தான் திருநங்கையாக வாழ்க்கையில் பட்ட வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொண்டார். நமிதா மாரிமுத்து கடந்து வந்த பாதை ரசிகர்களை கலங்கச் செய்தது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்.

மன அழுத்தம் - தற்கொலை முயற்சி
இதேபோபல் ஜெர்மன் மாடலான மதுமிதா மன அழுத்தத்தால் பல முறை தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்து கண்கலங்கினார். இப்படி போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கை புத்தகத்தில் வலி தந்த பக்கங்களை சக போட்டியாளர்களுடனும் பார்வையாளர்களுடனும் பகிர்ந்து வருகின்றனர்.

என் கணவர் செத்தப்போது..
அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தனது சோகக் கதையை பகிர்ந்து கொள்கிறார். தனது முதல் கணவரின் தற்கொலை குறித்து பேசும் பாவனி ரெட்டி, தனது கணவர் இறந்தபோது தனக்கு அழுகை வரவில்லை என்றும் தனக்கு உண்மையில் கோபம் தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.

இப்படி நடுவுல விட்டுட்டு போயிட்டாரு..
அவ்ளோ கனவு கண்டோம்.. அவ்ளோ கஷ்டப்பட்டோம்... இப்படி நடுவுல விட்டுட்டு போயிட்டாரு.. இதுதான் அவங்க மேல எனக்கு கோபம்... அவங்கள நான் ரொம்ப லவ் பண்ணியிருக்கேன்.. சொல்லனும்னா அவங்கள ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கிட்டேன். எனக்கு வாழ்க்கையில தனியாவே இருக்கணும்னு எழுதி வச்சுருக்காங்க போல.. என கண்ணீர் மல்க கூறுகிறார்.

பல சீரியல்களில் நடித்துள்ள பாவனி
பாவனி ரெட்டியின் இந்த பேச்சைக் கேட்ட சக போட்டியாளர்களான பிரியங்கா, அபினய், அக்ஷரா உள்ளிட்ட பலரும் கண்ணீர் விட்டுள்ளனர். பாவனி ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாசமலர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும் நடித்துள்ளார்.

தமிழில் மூன்று படங்கள்
பாவனி ரெட்டி தமிழ் சினிமாவிலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். வஜ்ரம், இனி அவனே ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனி ரெட்டி, தற்போது 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒரு வருடத்திலேயே கணவர் தற்கொலை
பாவனி ரெட்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாவனி ரெட்டி. ஒரு வருடத்திலேயே அவரது கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











