என்கிட்டயும் காயின் இருக்கு… நினைத்ததை முடித்த பாவ்னி… பாவம் அமீர் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அமீரின் தலைவர் பதவியை பாவ்னி தட்டிப்பறிப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
கமல் சொன்னது போல , சண்டை போட்டுக்கொள்கிறார்கள், அன்பு காட்டி கூடி கொள்கிறார்கள்.
ஆனால், டாஸ்க் என்று வந்தால் தனித்தனியாக விளையாடுகிறார்கள் என்றார் அது உண்மைதான் என்பதை பாவ்னி மீண்டும் நிரூபித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது முறையாக வந்த அபிஷேக் மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் ஷோவில் மிகவும் பேசும் பொருளாக இருந்தவர் அபிஷேக் ராஜா. அன்பு டீமுனு செயல்பட்டு வந்த இவர் 2வது வாரத்திலேயே வெளியேற்றப்படார்.

அபிஷேக் எலிமினேட்
பிக் பாஸ் ஷோவில் சுவாரசியம் குறைந்துவிட்டதாக நினைத்து அபிஷேக் ராஜா மீண்டும் கிஃப்ட் பாக்ஸிலிருந்து எண்ட்ரி கொடுத்தார். ஆனால், மீண்டும் சண்டையை மூட்டிவிடும் வேலையை அபிஷேக் வீட்டில் செய்து வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டார்.

முதல் ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சிக்கான, முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது. இதில், நாற்காலியை சுற்றி சுற்றி வந்து அமீர் வெற்றி பெருகிறார். ஆனால், பாவ்னி நாணயத்தை பயன்படுத்தி தலைவர் ஆவது போல் காட்சி காட்டப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் மிகவும் நட்பாக பழகி வரும் நிலையில், அமீரின் தலைவர் பதவியை பாவ்னி பறித்துள்ளது . இன்றைய எபிசோடுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











