அவர் புருஷனை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும்.. கமலிடமே கூறிய பிரியங்கா.. கடுப்பாகும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாடியா சங்கின் கணவரை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என்று பிரியங்கா கூறியது ரசிகர்களை எரிச்சலாக்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

இதில் மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஸ்டோரி டாஸ்க்கில் கூறிய கதை குறித்த பேசினார் கமல்.

சங்கை யாருக்கும் தெரியாது

சங்கை யாருக்கும் தெரியாது

அப்போது நாடியா சங்கின் கணவரை புகழ்ந்தார். நாடியா சங் தனது கதையை கூறும் போது, நாடியா சங்கை அனைவருக்கும் தெரியும். ஆனால் சங்கை யாருக்கும் தெரியாது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம் என்றும், அவரை திருமணம் செய்த பிறகு தான் என் கனவுகள் நனவானது என்றும் கூறினார்.

பேக் கிரவுண்ட் மியூஸிக்

பேக் கிரவுண்ட் மியூஸிக்

இதனை நேற்றைய எபிசோடில் நினைவு கூர்ந்த கமல், உங்கள் கணவரை ஹீரோவாக்கி விட்டீர்கள். அவரது பெயர் பேக்கிரவுண்ட் மியூஸிக் போல் உள்ளது என புகழ்ந்தார். மேலும் சா..சங் என பேக் கிரவுண்ட் மியூஸிக்கையும் வாயால் போட்டுக் காட்டினார் கமல்.

கட்டிப் பிடித்து கிஸ் அடிக்க வேண்டும்

கட்டிப் பிடித்து கிஸ் அடிக்க வேண்டும்

தொடர்ந்து பிரியங்காவிடம் நாடியா கூறிய கதை குறித்து கேட்டார் கமல். அதற்கு நாடியாவின் கதையை கேட்ட பிறகு அவரது கணவர் சங்கை நேரில் பார்த்து கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் போல் இருந்தது என்று கூறினார். பிரியங்காவின் பதிலைக் கேட்ட ரசிகர்கள் முகம் சுளித்து விட்டனர்.

மற்றவர்களை பேச விடாமல்

மற்றவர்களை பேச விடாமல்

ஏற்கனவே பிரியங்கா தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து குரல் கொடுத்து வருகிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் மற்ற போட்டியாளர்களை பேசவே விடாமல் எல்லா இடத்திலும் தானே பேசி வருகிறார் பிரியங்கா.

மரியாதையே போய்விட்டது

மரியாதையே போய்விட்டது

கமல் மற்ற போட்டியாளர்களிடம் பேசினால் கூட பிரியங்காவே பதில் சொல்கிறார். கொளுத்திப்போடுவோம் எனக் கூறி தேவை இல்லாமல் மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசும் பிரியங்கா எந்நேரமும் ஸ்மோக்கிங் ஏரியாவில் நின்று கிசுகிசு பேசி வருகிறார். இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா மீது உள்ள மரியாதையே போய்விட்டது என்று கூறி வருகின்றனர்.

பிரியங்காவால் எரிச்சலாகும் ரசிகர்கள்

பிரியங்காவால் எரிச்சலாகும் ரசிகர்கள்

பிரியங்காவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், ஆரம்பத்தில் தான் பிரியங்காவை விரும்பியதாகவும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றும் அடுத்தவர் விஷயத்தில் அதிகம் தலையிடுகிறார் என்றும் விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X