For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன மாதிரியே நீங்களும் ஒரு பேக்கு.. அக்‌ஷரா மீது உங்களுக்கு பொறாமை.. பிரியங்காவை பங்கம் பண்ண ராஜு!

  |

  சென்னை: நேற்று ராஜுவின் கண்ணாடியாக பாவனி இருந்த நிலையில், இன்றைய எபிசோடில் அப்படியே போனால் போர் அடித்து விடும் என சின்னதாக ஒரு மாற்றம் செய்துள்ளது பிக் பாஸ் குழு.

  பிரியங்காவின் கண்ணாடியாக இன்று ராஜு ஜெயமோகன் மாறி அவர் முன்னதாக நின்று அவரை பங்கமாக கலாய்த்து பேசும் காட்சிகள் தற்போது வெளியான 3வது புரமோவில் இடம்பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

  நல்லவேளை ராஜு பாவனியின் கண்ணாடியாக இருந்து பேசியிருந்தால் இன்னமும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அவரது மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்தேன் புனித் ராஜ்குமார் புகழஞ்சலி கூட்டத்தில் கலங்கிய விஷால்அவரது மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்தேன் புனித் ராஜ்குமார் புகழஞ்சலி கூட்டத்தில் கலங்கிய விஷால்

  ராஜுவின் கண்ணாடி

  ராஜுவின் கண்ணாடி

  நேற்றைய எபிசோடில் ராஜுவின் கண்ணாடியாக பாவனி இருந்த நிலையில், ரசிகர்களுக்கு முழுவதுமாக அவர்கள் வந்த காட்சிகள் மொத்தமும் என்டர்டெயின்மென்ட்டை மட்டுமே கொடுத்ததாக பாவனியின் ஆர்மியினரே ஹாஷ்டேக் எல்லாம் போட்டு ரசித்தனர். ஆனால், இன்று ராஜு பாவனியின் கண்ணாடியாக இல்லாமல் பிரியங்காவின் கண்ணாடியாக மாறிய நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

  போடா டேய்

  போடா டேய்

  சிபி, நிரூப், அக்‌ஷரா உள்ளிட்ட போட்டியாளர்கள் கெட்ட வார்த்தைகளையே இந்த ஷோவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இன்றைய புரமோவில் போடா டேய் என பாவனியும் ராஜுவை திட்டுவதை பார்த்த ரசிகர்கள் இந்த சீசன் ரொம்பவே மட்டமாக எல்லை மீறி செல்கிறது என்றும் கமல் சார் கடந்த வாரமே பீப் போட காரணமாக இருந்தவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பிரியங்காவின் கண்ணாடி

  பிரியங்காவின் கண்ணாடி

  தாமரையின் கண்ணாடியாக மாறிய பிரியங்காவை பல்டி எல்லாம் அடிக்க வைக்க திட்டம் போட்டு வெறுப்பேற்றி இருந்தார் தாமரை. இந்நிலையில், இன்றைய எபிசோடில் பிரியங்காவின் கண்ணாடியாக ராஜுவை நடிக்க வைத்துள்ளார் பிக் பாஸ். ராஜுவும் பிரியங்கா போல மேக்கப் போட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கவே செம க்யூட்டாக உள்ளது.

  இந்த சீசன் என்டர்டெயினர்ஸ்

  இந்த சீசன் என்டர்டெயினர்ஸ்

  இந்த சீசனில் ரசிகர்களை அதிகளவில் மகிழ்வித்து வரும் என்டர்டெயினர்கள் என்றால் அது ராஜு மற்றும் பிரியங்கா என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருவரும் ஆடியன்ஸ்க்காக கேம் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் களமிறங்கி கலக்கி உள்ள இன்றைய எபிசோட் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் அவலுடன் உள்ளனர்.

  பிரியங்கா பேக்கு

  பிரியங்கா பேக்கு

  டாஸ்க் என்று வந்து விட்டால் என்ன செய்வது என்றே தெரியாமல் என்னை மாதிரியே பேக்கா நீங்க இருக்கீங்க பிரியங்கா என ராஜு பிரியங்காவின் கண்ணாடியாக மாறி பேச ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். உங்க கண் வழியா என்னை பார்க்கும் போது இவன் சரியான ஃபிராட் ஆச்சே ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்னு நீங்க பேசுறதை என்னால ஸ்மெல் பண்ண முடியுது என பட்டையை கிளப்புகிறார்.

  அக்‌ஷரா மேல காண்டு

  அக்‌ஷரா மேல காண்டு

  மேலும், அக்‌ஷரா மேல உங்களுக்கு ஒரு காண்டு இருக்குற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. நீ என்னடி பெரிய இவ நான் பாருடி அந்த மாதிரி சொல்ல முடியாது. ஆனால், அப்படி எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கிறீங்க என சொல்ல அக்‌ஷரா அதனை என்ஜாய் பண்ணி சிரிக்கும் புரமோ வைரலாகி வருகிறது. பாவனி பற்றியும் அடுத்து ராஜு சொன்னதால் தான் இருவருக்கும் இடையே அந்த சண்டை எழுந்திருக்கும் என்பது தெளிவாக புரிகிறது.

  English summary
  Bigg Boss Tamil 5 Day 45 Promo 3 out now. It shows Raju Jeyamohan imitating like Priyanka in mirror task. This promo has become a stress buster to the audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X