பிரியங்காவுக்கு லவ் பண்ண சொல்லிக்கொடுத்த ராஜு.. பிக் பாஸ் அன்சீன் சுவாரசியம்!
சென்னை : பிக் பாஸ் ரசிகர்களால் அன்போடு ராஜூ பாய் என்று அழைக்கப்படுபவர் ராஜு.
இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாளில் இருந்தே, இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் கூடி அவரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ராஜூ , பிரியங்காவுக்கு லவ் பண்றது எப்படி என்பதை கற்றுத்தரும் அன்சீன் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ராஜூ
ராஜூ உண்மையிலேயே பாராட்டுக்குரிய நபர்தான். வீட்டில் உள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ஆத்திரத்தில் கத்திவிடுகின்றனர். ஆனால், இதுநாள் வரையிலும் எந்த நேரத்திலும் கோபத்தை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் அமைதியாகவே இருக்கிறார் ராஜூ.

பாராட்டிய கமல்
கடந்த வாரம் கூட கமல் ஹாசனும் அவரின் அமைதியை சுட்டிக்காட்டி பாராட்டினார். மிக்சர் சாப்பிடும் ராஜூ என்று நெட்டிசன் கிண்லடித்தாலும் ராஜூன் உண்மையாக சுபாவமே இதுவதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

காது கேட்காதா
எத்தனை முறை பிரியங்கா காது கிழிய கத்தினாலும் சிபி சொல்வது போல சில சமயம் காது கேட்காதவர் போலவே இருந்து விடணும் என்பதை ராஜு தொடர்ந்து பின் பற்றி வருகிறார். ராஜூவின் ரசிகர்களுக்கும் இது பிடித்து இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் வாரா வாரம் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார்.

காதல் பாடம்
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ராஜூ பிரியங்காவுக்கு லவ் பண்ண சொல்லிக் கொடுக்கிறார். லவ் பண்ணும் போது லவ் பண்றவங்க கண்ண பாக்கணும் என்று கூறுகிறார். உடனே பிரியங்கா டேய் உன் கண்ணுஅழகாக இருக்குற கூறுகிறார். உடனே ராஜூ , இப்படியே பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது அப்போ அப்போ பார்க்கணும் என்று பிரியங்காவுக்கு காதல் பாடம் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











