ஃபுல் ஃபார்மில் நமீதா.. நான் விட மாட்டேன்.. தாமரை செல்வியுடன் மல்லுக்கட்டு.. பகீர் கிளப்பும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 5 வீட்டின் முதல் சண்டை | Namitha உணர்வுகளை மதிக்காத Thamarai selvi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பாவனி ரெட்டி பேசுவது ஒளிபரப்பானது. இதில் தனது கணவர் இறந்தது குறித்து உருக்கமாக பேசினார் பாவனி.

அந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதோடு சோகக்கதையை முடித்துக்கொள்ளுங்கள் பிக்பாஸ் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

நான் விட மாட்டேன்

நான் விட மாட்டேன்

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாத்ரூமில் பேசும் நமீதா மாரிமுத்து நாளைக்கு வீட்டில் பெரிய சண்டை இருக்கு என்கிறார். நான் விட மாட்டேன்.. நான் விட மாட்டேன்.. என தனது சுயரூபத்தை காட்டுகிறார் நமீதா மாரிமுத்து.

எச்சரிக்கும் பிரியங்கா

எச்சரிக்கும் பிரியங்கா

அதனை தொடர்ந்து அடுத்தக்காட்சியில் பெட்ரூமில் பிரியங்கா, அவங்க முன்னாடி திரும்பவும் சிரிக்காத என கூறுகிறார். இதில் சம்பந்தப்பட்டவர் தாமரை செல்வி என தெரிகிறது. அடுத்தக் காட்சியில் தாமரை செல்வி, இமான் அண்ணாச்சியிடம் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசுகிறார்.

நான் சமாதானப்படுத்தவா?

நான் சமாதானப்படுத்தவா?

அப்போது 40 குழந்தை இல்ல 400 குழந்தைங்க கூட நீங்க வளர்ப்பீங்க என்று கூறினேன் என அண்ணாச்சியிடம் கூறுகிறார்.அதனைக் கேட்ட அண்ணாச்சி எங்க ஊரு ஸ்லாங்கல சில வார்த்தைகள் இங்க உள்ள சிலருக்கு தவறாக தெரியும் என்றும் நான் வேண்டுமானால் அழைத்து சமாதானப்படுத்தவா என்றும் கேட்கிறார்.

அங்கு வர பிடிக்கவில்லை

அங்கு வர பிடிக்கவில்லை

அதற்கு தாமரை செல்வி, நான் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று பதில் சொல்கிறார். அப்போது அங்கு வரும் நமீதாவை அழைக்கிறார் அண்ணாச்சி, ஆனால் நமீதாவோ எனக்கு அங்கு வர பிடிக்கவில்லை என்று விலகி செல்கிறார். இதனால் தாமரை செல்விக்கும் நமீதாவுக்கும் தான் பிரச்சனை என தெரிகிறது.

முகத்தைக் காட்டிய நமீதா

முகத்தைக் காட்டிய நமீதா

இந்த புரமோவை பார்க்கும் போது இன்று இரவு தாமரை செல்வியை நமீதா மாரிமுத்து இன்று இரவு வச்சு செய்வார் என தெரிகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் நமீதாவுக்கும் தாமரை செல்விக்கும் ஏற்கனவே முட்டிக்கொண்டது. தொட்டு பேசிய தாமரை செல்வியை என்னை தொட்டு பேசாதீர்கள் எனக்கு பிடிக்காது என முகத்தை காட்டினார் நமீதா.

அன்சீனில் காட்டப்பட்ட காட்சிகள்

அன்சீனில் காட்டப்பட்ட காட்சிகள்

அவரை தாமரை செல்வி சமாதானப்படுத்த முயன்றும் அவர் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. இந்தக் காட்சிகள் அன்சீனில் ஒளிபரப்பானது. இந்நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது புரமோவில் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X