twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெட்ட வார்த்தைய கத்துக்கவே 6 மாசம் ஆயிடுச்சு.. காலேஜ்ல பொறுக்கி ஆயிட்டேன்.. ஓபனா பேசிய சிபி!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்த சிபி படு ஓபனாக பேசி கலக்கிவிட்டார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்த வந்த பாதையை பகிர்ந்து வருகின்றனர்.

    சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!

    அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி, பிரியங்கா மற்றும் சிபி ஆகியோர் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர். அக்ஷராவும் பிரியங்காவும் தங்களின் அப்பா இறந்ததை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

    திருவொற்றியூர் பள்ளியில்

    திருவொற்றியூர் பள்ளியில்

    சிபி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, அப்பா டாக்டர்,அம்மா ஹவுஸ் வொய்ஃப். நான்
    பிறந்தது கேரளாவில். அப்புறம் சேலம் ஸ்டீல் பிளான்ட் பகுதிக்கு வந்தோம். அங்கு 4, 5 வீடுகள்தான் இருக்கும். பின்னர் சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார்கள்.

    கெட்ட வார்த்தை கற்றுக்கொள்ள 6 மாதம்

    கெட்ட வார்த்தை கற்றுக்கொள்ள 6 மாதம்

    அங்கு எல்லாரும் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவார்கள். எனக்கு கெட்ட வார்த்தை தெரியாது. அவர்கள் பேசும் கெட்ட வார்த்தையும் புரியாது. கெட்ட வார்த்தையை கேட்டு தெரிந்து கொள்ளவே 6 மாதம் ஆகிவிட்டது. அதன் பிறகு திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு எல்லோரும் அடித்துக்கொள்வார்கள். அதையெல்லாம் பார்த்து பயமாக இருந்தது.

    காலேஜ்ஜில் பொறுக்கி ஆகிவிட்டேன்

    காலேஜ்ஜில் பொறுக்கி ஆகிவிட்டேன்

    பின்னர் காலேஜ்ஜில் சேர்ந்தேன். இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நம்மை இந்த ஏரியாவில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று கூறி காலேஜ் படிக்கும் போது பொறுக்கியாகி விட்டேன். இதுதான் உலகம் என்று அப்போதுதான் புரிந்தது.

    யூகே போனேன் வேலை பார்த்தேன்

    யூகே போனேன் வேலை பார்த்தேன்

    எப்போதுமே என் வீட்டில் நல்லா மோட்டிவேட் பண்ணுவாங்க. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். படித்து முடித்துவிட்டு யூகே போனேன்.. இத்தாலியில் வேலை பார்க்கும் போது சினிமாவில் நடிக்க தோனுச்சு... இந்தியா வர முடிவு பண்ணேன். வீட்டில் சொன்னேன்... வா என்றார்கள்..

    உடைஞ்சு போயிட்டேன்..

    உடைஞ்சு போயிட்டேன்..

    நண்பர்கள் ஒரு படம் பண்ணாங்க.. அதில் என்னை அறிமுகப்படுத்தினாங்க.. அதுல தெரிஞ்சுக்கிட்ட ஒரு விஷயம்.. நல்லா பண்ணா வாய்ப்பு கிடைக்கும் இல்லன்னா கிடைக்காது.. ரெண்டு டாப் டைரக்டர் என்னை கூப்பிட்டு பேசுனாங்க.. ஆனா அது நடக்கல.. உடைஞ்சு போயிட்டேன்.

    அசிங்கப்பட்டு வெளியே போனாலும்..

    அசிங்கப்பட்டு வெளியே போனாலும்..

    மாஸ்டர் படத்துல சான்ஸ் கிடைச்சுது. இந்த நேரத்துல லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி சொல்லணும்.. அவங்கள மாதிரி ஆட்களாளதான் என்னை மாதிரி ஆட்களுக்கு சான்ஸ் கிடைக்குது. எங்க அப்பாலாம் எனக்கு பெரிய கிஃப்ட் நல்லா மோட்டிவேட் பண்ணுவாரு.. இந்த நிகழ்ச்சியில அசிங்கப்பட்டு நான் வெளியே போனாலும்.. இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு சொல்லுவாரு.. என்று மனதில் பட்டதை பட்டென பேசினார் சிபி.

    English summary
    In today's episode of the Big Boss show, Cibi shared his memories of the past, spoke openly
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X