அபிஷேக் கொளுத்தி போடுகிறார்.. மீண்டும் வெடித்த மோதல்.. அண்ணாச்சியிடம் மல்லுக்கட்டும் சிபி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவின் மூலம் பிக்பாஸ் வீட்டில் இன்றும் ஒரு சண்டை இருப்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது நாட்கள் ஆகியுள்ள நிலையில் நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஒரு குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர். நேற்றைய எபிசோடில் பிரியங்கா நடந்த கொண்ட விதம் பார்வையாளர்களை கடுப்பேற்றியது. அக்ஷராவை குறி வைத்து அவர் மீது குறை கூறினார் பிரியங்கா.

ஏன் கார்னர் செய்கிறார்?

ஏன் கார்னர் செய்கிறார்?

இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்ன ஆனது? அக்ஷரா மீது ஏன் இவ்வளவு பொறாமை? ஏன் அவரை பிரியங்கா கார்னர் செய்கிறார் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். பிரியங்கா தான்தான் பிக்பாஸ் என்பதை போன்று நடந்து கொள்வதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

எரிச்சலாக்கும் அபிஷேக்

எரிச்சலாக்கும் அபிஷேக்

மற்றொரு பக்கம் அபிஷேக் மூத்த போட்டியாளர்களின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசி வருகிறார். அபிஷேக் நடந்து கொள்ளும் விதமும் பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

இதில் பிக்பாஸ் யாரை நெருப்பாக பார்க்கிறீர்கள் என கேட்டு ஹவுஸ்மேட்டுகளை பேச வைப்பதாக தெரிகிறது. அதன்படி டைனிங் டேபிளில் அமர்ந்துள்ள ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டில் யாரை நெருப்பாக பார்க்கிறார்கள்? எப்படி? என்ன காரணம்? என விளக்குகின்றனர்.

யாராவது கை விட்டால் சுட்டுடுவேன்

யாராவது கை விட்டால் சுட்டுடுவேன்

அதன்படி பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான சிபி முதல் நபராக பேசுகிறார். அவர் தன்னையே நெருப்பாக பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் யாராவது தன்னை கை விட்டு கால் விட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் சுட்டுவிடுவேன் என மிரட்டுகிறார் சிபி.

எப்போ குணம் மாறும்?

எப்போ குணம் மாறும்?

அடுத்ததாக தாமரை செல்வி பேசுகிறார். அவர் இமான் அண்ணாச்சியை நெருப்பாக பார்ப்பதாக கூறுகிறார். மேலும் இமான் அண்ணாச்சி நன்றாக காமெடி செய்வார், ஆனால் எப்போது அவருடைய குணம் மாறும் என்றே தெரியாது என கூறுகிறார் தாமரை செல்வி.

அபிஷேக் கொளுத்தி போடும் நெருப்பு

அபிஷேக் கொளுத்தி போடும் நெருப்பு

அவரை தொடர்ந்து பேசும் இமான் அண்ணாச்சி, அபிஷேக்கை கூறுகிறார். அபிஷேக் மீது தனக்கு ஒரு குறை இருப்பதாக கூறும் இமான் அண்ணாச்சி கொளுத்தி போடுவார்கள் இல்லையா, அந்த நெருப்பாக அபிஷேக் இருப்பாரோ என்ற சின்ன சந்தேகம் எனக்கு உள்ளது என தனது கருத்தை பதிவு செய்கிறார்.

அண்ணாச்சியிடம் எகிறும் சிபி

அண்ணாச்சியிடம் எகிறும் சிபி

அப்போது குறுக்கிடும் சிபி, நீங்கள் அபிஷேக் பற்றி பேசுவது எனக்கு தவறாக படுகிறது என அண்ணாச்சியிடம் எகிறுகிறார். இவ்வாறாக உள்ளது இன்றைய முதல் புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்றும் பிக்பாஸ் வீட்டில் எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X