பிக் பாஸ் 5.. நச்சுன்னு ஒரு அப்டேட்.. தொகுத்து வழங்கப் போவது இவராமே.. பரபரக்கும் சின்னத்திரை!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

Recommended Video

Shocking Bigg Boss Tamil 5 NEW HOST entry? | Kamal Hassan Drops, STR, Vijay Tv

இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமலஹாசன் கடந்த 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது 4வது சீசன் முடிந்து 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் , இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் எனவும் வேறு ஒரு நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஆரி வின்னர்

ஆரி வின்னர்

அக்டோபர் 4ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் 4, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் 100 நாட்கள் வீட்டுக்குள் இருந்து இறுதி போட்டியாளராக ஆரி, ரியோ, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ரம்யா பாண்டியன் ஆகியோர் இருந்தார்கள். இதில் 16 கோடி வாக்குகளுடன் ஆரி டைட்டில் வின்னரானார். 2ம் இடம் பாலாஜி முருகதாஸூக்கு கிடைத்தது.

பணிகள் தொடங்கின

பணிகள் தொடங்கின

5வது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுவந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் தொடங்கி உள்ளதாகவும், செட் அமைக்கும் பணிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் பணிகளையும் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் உலாவருகின்றன.

சந்தேகம்

சந்தேகம்

இந்நிலையில் 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் 5வது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கட்சியை பலப்படுத்தும் வேலையில் கமல் தீவிரமாக இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 5வது சீசனை கமல் தொகுத்து வழங்குவது சந்தேகமாக உள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தை

முதற்கட்ட பேச்சுவார்த்தை

5வது சீசனை ஒருவேளை கமல் தொகுத்து வழங்க முன்வரவில்லை என்றால் , நடிகர் சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் உறுதியான தகவல்

விரைவில் உறுதியான தகவல்

இந்த செய்தியை கேட்ட சிம்பு ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளன. மேலும் இதுகுறித்த உறுதியான தகவலை சிம்பு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிம்புக்கு எந்த அனுபவமும் இல்லை என்றாலும், ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக இருந்த சிம்புவின் பங்களிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, மேலும் பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் தெளிவாக பல கருத்துகளை இவர் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X