தாமரை அப்பாவியா?.. நடிக்கிறாரா?.. ஹவுஸ்மெட்டுகளிடம் வசமாக சிக்கினார் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று, டின்னர் பார்ட்டியுடன் ஃபினாலே டிக்கெட் டாஸ்க் நடத்தப்பட்டது.
Recommended Video
இதில் ஃபினாலே டிக்கெட்டை பெற தகுதியில்லாத ஒருவரை போட்டியாளர்கள் தேர்வு செய்து வெளியேற்ற வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.
இதையடுத்து, ஹவுஸ்மெட்டுகள் ஒட்டுமொத்தமாக கூடி நிரூப்பை ஃபினாலே டிக்கெட் டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜெயிக்க வேண்டாம்
இதையடுத்து, தாமரை தம்பி வெளியில போய்டானா என்று பிரியங்காவிடம் கேட்க கடுப்பான பிரியங்கா, ஆமாம் உனக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதே என கேட்டு கடுப்பானார். நீ எதுக்காக இங்கே வந்த ஜெயிக்கத்தானே வந்தே என்று கேட்டார். உடனே தாமரை நான் ஜெயிக்க வேண்டாம், எனக்கு யார் வெற்றி பெற்றாலும் சந்தோசம் என்றார்.

ஜெயிக்கணும்னு தெரியாதா
தாமரையின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த சஞ்சீவ், என்ன பேசுறீங்க தாமரை, உங்களுக்கு எதுவுமே தெரியாமலா ஷோவிற்கு வந்தீர்கள்?, கேட்டால் என் மாமியார் பார்ப்பார் என்பதற்காக விளையாடுகிறேன் என கூறுவீர்கள் என கூறுகிறார். மேலும் இதுவரை இந்த ஷோவில் ஜெயிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? சும்மா எதுவுமே தெரியாது தெரியாது சொல்றீங்க என்று கூற ஒரு கட்டத்தில் அனைத்து போட்டியாளர்களும் சும்மா தெரியானு சொல்லதே என்று அந்த இடத்தைவிட்டு கிளப்பி விட்டனர்.

தாமரையின் நாடகம்
அதேபோல, ஓபன் நாமினேஷனில் தாமரை நிரூப்பின் பெயரை கூறி விட்டு, நிரூப்பிடமே சென்று சாரிடா தம்பி எனக்கு யாரை சொல்வது என்று தெரியவில்லை என்று ஒரு நாடகம் போட்டார். அதுமட்டும் இல்லாமல், டிக்கெட் ஃபினாலே டாஸ்கில் இறுதி வரை தம்பி நீ விளையாடு டா நான் போகிறேன், நீ நல்லா விளையாடுவே என்று கூறி விட்டு , ராஜூ வந்து நிரூப்பின் பெயரை சொல்லி நிரூப் வெளியேறும் வரை தாமரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு அவர் போனபின்பு புலம்புவதை பார்க்கும் போது தாமரை கேமை புரிந்துவைத்துத்தான் விளையாடுகிறார் என்பதை நமக்கு புரியவைக்கிறது.

தாமரை அப்பாவியா
தாமரை உண்மையிலேயே அப்பாவியா? அல்லது அப்பாவி போல் நடிக்கிறாரா? அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா? என்பதில் ஹவுஸ்மேட்ஸுக்கு இருந்த குழப்பம் ஓரளவு தீர்ந்தது. அவர் நடிக்கிறார் என்பதை ஹவுஸ்மேட்ஸ்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை நேற்றைய எபிசோடில் காண முடிந்தது.


Click it and Unblock the Notifications











