யாருக்கிட்ட.. இது தேவையா.. பிரியங்காவுக்கு செம நோஸ்கட் கொடுத்த தாமரை.. வேற லெவல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறையும் ஃபெஸ்டிவல் சீசனில் சிக்கியுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் என கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுக்க பண்டிகைகள் வரிசைக் கட்டி காத்துள்ளன.
இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டின் முதல் பண்டிகையாக விஜயதசமி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி
இந்நிலையில் இன்றைய முதல் இரண்டு புரமோக்களில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஜயதசமி கொண்டாட்டங்கள் அதற்கு இடையில் நடக்கும் ஹவுஸ் மேட்ஸ்களின் காஸிப்பு, அரசியல் என பல விஷயங்கள் காட்டப்பட்டன. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் கேட்டால் யாரை சொல்வாய்?
இந்த புரமோ வீட்டின் கேப்டனான தாமரை செல்விக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் இடையில் நடப்பதாக உள்ளது. இதில் பாத்திரம் கழுவும் பிரியங்கா, தாமரை செல்வியை அழைத்து, இந்த வீட்டில் எல்லா வேலையும் சிறப்பாக செய்தவர் யார்? நல்லப்பிள்ளை யார் என்று கேட்பார். அதற்கு வீட்டின் தலைவரான நீ யார் பெயரை சொல்வாய் என்று கேட்கிறார்.

எனக்கு ஏதாவது லாபம் இருக்கணும்
அதற்கு பதில் சொல்லும் தாமரை செல்வி, மூன்று பேருமே நல்லாதான் பார்த்தார்கள் என்று கூறுவேன் என்கிறார். அதனை கேட்ட பிரியங்கா அது எனக்கு தேவையில்லை, நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் தானே.. நீ எனக்கு ஃபிரண்டா இருக்குறதுக்கு எனக்கு ஏதாவது லாபம் இருக்கணுமா இல்லையா என்கிறார்.

பிரியங்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம்
பிரியங்கா கேட்கும் எல்லா கேள்விக்கு ஆமாம் ஆமாம் சரிதான் என தலையை ஆட்டுகிறார் தாமரை செல்வி. இதனை பார்த்த பிரியங்கா, இப்போ சொல்லு யார் பேர சொல்லுவ என்று கேட்க, பட்டென யோசிக்காமல் நாடியா என்று கூறி பிரியங்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் தாமரை செல்வி.

இது தேவையா பிரியங்கா ?
இதனை சற்றும் எதிர்பாராத பிரியங்கா இந்தி பாடலை பாடி ஃபீலிங்ஸை காட்டுகிறார். பிரியங்கா பாடும் பாடலுக்கு இடுப்பை ஆட்டி ஆட்டம் போடுகிறார் தாமரை செல்வி. இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள், இது தேவையா பிரியங்கா என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











