twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவறாக நினைத்த மகன்.. என் வாழ்க்கை மாதிரி எந்த பொண்ணோட வாழ்க்கையும் ஆகிடக் கூடாது.. கதறிய தாமரை!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகனே தான் தவறு செய்துவிட்டதாக நினைத்திருப்பதை கூறி கதறி அழுதார் தாமரை செல்வி.

    Recommended Video

    4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil

    பிக்பாஸ் சீசன் 5 நிக்ழச்சியில் முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    கமலின் விக்ரம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்! கமலின் விக்ரம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    கடந்த வாரம் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க் இந்த வாரமும் தொடருகிறது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி கண்ணீரும் கம்பளியுமாய் செல்கிறது.

    நாங்க 5 பேரு பிள்ளைங்க

    நாங்க 5 பேரு பிள்ளைங்க

    இந்நிலையில் இன்றைய எபிசோடில், நாடக் கலைஞரான தாமரை செல்வி தனது கதையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் அருகே உள்ள ஏமாத்தூர் கிராமம் தான் என் சொந்த ஊரு. கஷ்டப்படுற குடும்பம் தான். நாங்க 5 பேரு பிள்ளைங்க.

    சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம்

    சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம்

    அப்பா எப்போவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பார். வீட்டில் எப்போவும் சண்டைதான் நடக்கும். அம்மாவை பெத்த பாட்டியும் மாமாவும் தான் உதவினாங்க. சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்படிதான் 5 பிள்ளைகளை வளர்த்தாங்க.

    பாவாடை தாவணி போட்டு..

    பாவாடை தாவணி போட்டு..

    குடும்பம் இவ்ளோ கஷ்டப்படுதேன்னு, எங்க மாமா ஒரு நாடகம் போடுற குரூப்புல சேத்து விட்டாங்க. நான் சின்ன பொண்ணா இருந்ததால அப்போவே எனக்கு பாவாடை தாவணி போட்டு கூட்டிட்டு போவாங்க. அப்போதான் சேத்துப்பாங்கன்னு. நான் போனதும் அங்க உள்ள கோமாளிகள் இந்த பொண்ணு இருந்தா நாங்க நடிக்க மாட்டோம் சொல்லிட்டாங்க.

    ஒருவரை திருமணம் செய்தேன்

    ஒருவரை திருமணம் செய்தேன்

    நாடகத்துல நடிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுப்பாங்க. என் குடும்பத்தில் சாப்பாட்டு கஷ்டம் தீர்ந்தது. அப்புறம் ஒருத்தர் குழந்தையை விட்டுவிட்டு தன் மனைவி சென்றுவிட்டதாகவும் தான் கஷ்டப்படுவதாகவும் கூறினார். அதைக் கேட்டு அவரை திருமணம் செய்தேன். அங்கு போன பிறகுதான் தெரிந்தது, குழந்தையை பிடுங்கி வைத்துக் கொண்டு அவரது மனைவியை விரட்டி விட்டார்கள் என்று.

    அவ்ளோ கொடுமை படுத்துவாங்க

    அவ்ளோ கொடுமை படுத்துவாங்க

    அந்த பையனை நான்தான் வளர்த்தேன். அதன்பிறகு எனக்கு ஒரு மகன் பிறந்தான். என் மகன் பெயர் சிவராமன். என் கணவர் குடும்பத்துல 5 பேர் அக்கா தங்கை. அவ்ளோ கொடுமை படுத்துவாங்க. என்னையும் சரி என் குழந்தையையும் சரி. போதையில் வந்து எழுந்திரிக்கவே முடியாத அளவுக்கு அடிப்பார் என் கணவர்.

    பன்றிகளின் சாப்பாட்டை சாப்பிடணும்

    பன்றிகளின் சாப்பாட்டை சாப்பிடணும்

    மகனுக்கு பால் கொடுத்துவிட்டு சாப்பிட சாப்பாடு இருக்காது. சாப்பாடு கூட போட மாட்டார்கள். பன்றிகளுக்கு சமைத்துப் போடுவதை சாப்பிட சொன்னார்கள். என் மகனை காப்பாற்ற வேண்டும் என என் குழந்தையை தூக்கிக் கொண்டு என் வீட்டுக்கு போனேன். அப்புறம் அங்கிருந்து திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தேன்.

    நல்ல மாமியார்

    நல்ல மாமியார்

    பின்னர் பார்த்தாசாரதி என்பவர் என்னை 2வது திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என் குழந்தையை நல்லா பாசத்தோடு பார்த்துக் கொள்கிறேன் என்றார். 2வது திருமணம் செய்து கொண்டேன். பாசமா இருப்பார். ஆனால் அக்கறை இருக்காது. எல்லாமே நான்தான் செய்யணும். அங்கேயும் ஒரு மகன் பிறந்தான். என் வாழ்க்கையில கிடைச்ச நல்ல விஷயம் என் மாமியார். எனக்கு கிடைச்ச மாமியார் மாதிரி யாருக்கு கிடைப்பாங்கன்னு தெரியல..

    ஒரு வீடு வாங்கினேன்

    ஒரு வீடு வாங்கினேன்

    பாசமா பார்த்துப்பாங்க.. நாடகத்துல டபுள் மீனிங்கில் பேசுவாங்க.. பிடிக்கலைன்னாலும் குடும்பத்துக்கு காசு வேணும்மேன்னு நடிச்சேன். அதனால என் வீட்டுக்கார் சண்டை போடுவார். ஆனா மாமியார் ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னை அழவிடமாட்டாங்க. ஒரு வீடு வந்துச்சு என்னை வாங்க சொன்னாங்க. லோன் போட்டு வீடு வாங்கினேன். நிறைய ரசிகர்கள் உதவி பண்ணாங்க.

    என் மகனை விட்டேன்

    என் மகனை விட்டேன்

    கொஞ்சம் கடன் வாங்கி கொடுத்தேன். லாக்டவுனால நாடகம் போட முடியாம போயிடுச்சு. இதனால கடனை கட்ட முடியல. என்னோட முன்னாடி வாழ்க்கையை பத்தி சொல்லணும்னா, நான் வளர்த்த பையன், தம்பிய பார்க்கணும் சொல்லி என் மகனை கூட்டிட்டு போனான். நானும் 2 வாரத்துக்கு போய் இருக்கட்டும் என்று விட்டேன்.

    தப்பு பண்றேன்னு நினைக்கிறான்

    தப்பு பண்றேன்னு நினைக்கிறான்

    அப்புறம் என் மகனை பார்க்க போனேன். ஆனா என்னை பார்க்கவே விடல.. நான் இங்கே சொல்லலன்னா அம்மா பட்ட கஷ்டம் அவனுக்கு தெரியாமலே போயிடும். 4 மாசம் ஆயிடுச்சு என் பையன பார்த்து. கூப்பிட்டா நான் இங்கேயே இருக்கேன்னு சொல்றான். என்னை பார்க்கும் போதெல்லாம் தப்பு பண்றேன்னு நினைக்கிறான்..

    எந்த பொண்ணோட வாழ்க்கையும்

    எந்த பொண்ணோட வாழ்க்கையும்

    அவன காப்பாத்த தான் நான் வந்தேன். என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாங்க நான் பார்த்ததில்லன்னு சொன்னேன். என்ன தோனுதோ பேசுங்கன்னு சொன்னாங்க. எல்லாரும் போக சொன்னாங்க.. என் பிள்ளைங்க நல்லாருக்கணும்.. என் வாழ்க்கை மாதிரி யாரோட வாழ்க்கையும் ஆகிட கூடாது.. இவ்வாறு தாமரை செல்வி உருக்கமாக பேசினார்.

    English summary
    Bigg boss Tamil 5: Thamarai Selvi shares her story in Biggboss house. Thamarai Selvi cried while talking about her Son.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X