உன்னோட உண்மை முகம் வந்துருச்சு தாமரை... பிரியங்காவின் பேச்சால் கண்கலங்கிய தாமரை!
சென்னை : அர்ச்சனா போல போட்டியாளர்களிடம் அன்பு காட்டி, மினி அன்பு டீமாக செயல்படுவார் பிரியங்கா என்று பார்த்தால், அந்த வீட்டில் நான் வைத்தது தான் சட்டம் என்று அராஜகம் செய்து வருகிறார்.
அதுவும், அபிஷேக்குடன் சேர்ந்து கொண்டு பிரியங்கா செய்யும் சிலிமிஷங்கள், பிரியங்காவின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறது.
இணையத்தில், அவருக்கு எதிராக பல எதிர்மறையான கருத்துக்களும் வேகமாக பரவின.

பிரியங்கா தாமரை
அன்பு, பாசம், பாயாசம்னு பேசிவந்த வந்த பிரியங்கா மற்றும் தாமரை, கடந்த வாரம் தலைவராகும் தகுதி இல்லை என்று பிரியங்கா பேசியதை அடுத்து, தற்போது இருவரும் பரம எதிரி போல மாறி உள்ளார். தாமரை எது செய்தாலும் குற்றம் என்பது போல பிரியங்கா அவரை டார்கெட் செய்து வருகிறார்.

செம சண்டை
இன்றைய லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில், தாமரையை சீண்டி வம்பு இழுப்பது போல பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதையடுத்து,பிரியங்கா தாமரையை கிண்டல் செய்வது போல, பேசிக்காட்டினார். இதனால் வீட்டில் கைகளப்பு ஏற்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு சண்டை ஏற்பட்டது.

கலங்கிய தாமரை
இது டாஸ்க் என்று சொல்ல, மேலும் கடுப்பான தாமரை, கத்தியை எடுத்து குத்திட்டு.. அதுவும் டாஸ்க் என சொல்லுவியா...என் மனசை பாதிக்கும்னு தெரிஞ்சிதான் நீ பேசுற, டாஸ்கில் நான் பேசுவதைத்தான் கிண்டல் செய்வது தப்புஇல்லையா ஆக்ரோஷமாக கத்தினார். இதையடுத்து பிரியங்கா, உன்னோட உண்மை முகம் வந்துருச்சு தாமரை என நான் எப்பவும் இப்படித்தான், நீ தான் அடிக்கடி மாறுவா என்று கூறி கண்கலங்கினார்.

பிராங்க
இறுதியில் ரெட் டிவி இது எல்லாம் நாங்க பேசி வச்சு பண்ணது தான், இப்படி பேசினாத்தான் தாமரை சண்டை போடுவானு தெரியும் அதான் பேசுனோம் இது எல்லாம் ப்ராங்க் என்று ஒரே போடு போட்டார். இது அங்கிருந்த போட்டியாளர்களை மட்டும் இல்லாமல், நம்மையும் காண்டாக்கியது.

அடாவடி பிரியங்கா
பிரியங்காவின் அடாவடி பேச்சை பார்த்து பலரும் கடுப்பாகி உள்ளனர். தாமரையை சூடேத்தி கிட்டே இருந்தால் போதும்னு ஸ்கேச் போட்டு தாமரையை சீண்டிகிட்டே இருக்கா. இதுக்கு அந்த சுவாரஷ்ய சைக்கோவும் உடந்தை என பிரியங்கா மீதான நெகடிவ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











