3வது ஃபைனலிஸ்ட்.. முதல் இடத்துக்கு எப்படி போகணும்னு ராஜு பாய்க்கு நல்லாவே தெரியும்!

சென்னை: மக்களால் தேர்வு செய்யப்படாத இருவர் முதல் மற்றும் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக மாறிய நிலையில், மக்களின் அதிக ஆதரவுடன் ராஜு ஜெயமோகன் 3வது ஃபைனலிஸ்ட்டாக மாறியுள்ளார்.

நாமினேஷனில் வந்தாலே முதலில் சேவ் ஆகிவிடுகிறார் ராஜு. அந்த அளவுக்கு தொடர்ந்து மக்களின் பேராதரவு ராஜுவுக்கு வெளியே கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்திலேயே தனது தனித்துவத்தால் மக்கள் மனதை பிடித்து விட்ட நிலையில், கடைசி வரை அதை கெடுத்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொண்டே சென்றது தான் அவருடைய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் சனிக்கிழமையே சேவ்

மீண்டும் சனிக்கிழமையே சேவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் சனிக்கிழமை ஒருவரை கமல் காப்பாற்றி வருகிறார். சனிக்கிழமை சேவ் ஆகும் அந்த நபருக்குத் தான் மக்கள் அதிக அளவில் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ராஜு சனிக்கிழமையே சேவ் ஆகி கெத்துக் காட்டி உள்ளார்.

3வது ஃபைனலிஸ்ட்

3வது ஃபைனலிஸ்ட்

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அடிபட்ட காலுடன் போட்டியிட்டு சிபியை வென்று டிக்கெட் டு ஃபினாலேவை தட்டிச் சென்ற அமீர் இந்த 5வது சீசனில் முதல் ஃபைனலிஸ்ட்டாக மாறினார். பாவனியை 2வது ஃபைனலிஸ்ட்டாக மாற்றி விடக் கூடாது என அவருக்கு தனது ஆதரவை கொடுக்காமல் மொத்த கேமையும் மாற்றி அசிங்கப்பட்ட நிலையில், இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப் மாறினார். இந்நிலையில், அதிக மக்கள் ஓட்டுக்களுடன் 3வது ஃபைனலிஸ்ட்டாக ராஜு தேர்வாகி உள்ளார்.

முதல் இடத்துக்கு போக தெரியும்

முதல் இடத்துக்கு போக தெரியும்

ரேங்கிங் டாஸ்க்கின் போது சிபி முதல் இடத்தில் ஏறி நின்று கொண்டு நான் தான் ஜெயிப்பேன் என்றும் ராஜுவுக்கும் இங்கே ஏறி நிற்க பயம் என்று சொன்னார். ஆனால், கடைசியில் பெட்டியுடன் இதுவே நமக்கு ஜாஸ்தி என நடையை கட்டி விட்டார் சிபி. சிபியிடம் அப்பவே மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு எப்படி வரணும்னு எனக்குத் தெரியும் என ராஜு சொல்லி அதிர வைத்தார்.

அன்கண்டிஷனல் லவ்

அன்கண்டிஷனல் லவ்

தொடர்ந்து ராஜு ஜெயமோகனுக்கு இந்த சீசனில் மக்களின் அன்கண்டிஷனல் லவ் இருந்து கொண்டே இருக்கிறது. இதை அறிந்து கொண்ட நிரூப் தொடர்ந்து ராஜுவுக்கு எதிராகவே செயல் பட்டு வந்தாலும், அதை புரிந்து கொண்ட பிரியங்கா ராஜுவை வீழ்த்த நினைக்காமல் அவரும் ராஜுவுடன் அன்பாக பழகுவது ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 8th January 2022 - Promo 1 | யார் கடைசியாக ELIMINATE ஆவது??
4வது ஃபைனலிஸ்ட்

4வது ஃபைனலிஸ்ட்

ஞாயிற்றுக்கிழமை பிரியங்கா முதலில் காப்பாற்றப்பட்டு மக்களின் ஆதரவுடன் 4வது ஃபைனலிஸ்ட்டாக மாறிவிடுவார். கடைசி ஃபைனலிஸ்ட்டாக பாவனி சேவ் ஆக தாமரை எவிக்ட் ஆகும் காட்சிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X