ஓய் பெருசு கேட்குதா… பிரியங்காவை பங்கமாக கலாய்த்த இமான் அண்ணாச்சி !
சென்னை : பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் இமான் அண்ணாச்சி மற்ற ஹவுஸ்மெட்டுகள் எப்படி நடிந்து கொள்கிறார்கள் என்பதை அவர் செய்துகாட்டுகிறார்.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக அழுதுவடிந்த பிக்பாஸ் ஹவுஸ் இன்று சற்று கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 4 வது நாள் நிகழ்ச்சி நேற்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

இசைவாணியின் கதை
இதில் முதல் ஆளான தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்து இசைவாணி பேசினார். இதில் சாப்பாட்டுக்கே வழியில்லை, ஸ்கூல் பீஸ் கட்டாம வெளியில் நின்னேன் என்று கண்ணீருடன் கூறினார். இசைவாணியின் இந்த கதையால் கடுப்பான நெட்டிசன்ஸ் எந்த கவர்மென்ட் ஸ்கூல்ல பீஸ் கட்ட சொல்றாங்க என்று கேட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

கதறி அழுத நமீதா
இதேபோல சின்னப்பொண்ணு,இமான் அண்ணாச்சி, ஸ்ருதி பேசினார்கள். நேற்று நமீதா மாரிமுத்து திருநங்கையாக வாழ்க்கையில் தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுது அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தார்.

பாவனி ரெட்டி சோகக்கதை
இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியானது. இதில் சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தனது சோகக் கதையை பகிர்ந்து கொள்கிறார். தனது முதல் கணவரின் தற்கொலை குறித்து பேசும் பாவனி ரெட்டி, தனது கணவர் இறந்தபோது தனக்கு அழுகை வரவில்லை என்றும் தனக்கு உண்மையில் கோபம் தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.

2வது ப்ரோமோ
இதையடுத்து வெளியான இரண்டாவது புரமோவில், பாத்ரூமில் பேசும் நமீதா மாரிமுத்து நாளைக்கு வீட்டில் பெரிய சண்டை இருக்கு என்கிறார். நான் விட மாட்டேன்.. நான் விட மாட்டேன் என்று கத்துகிறார்.

ஓய் பெருசு…
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், இமான் அண்ணாச்சி அந்த வீட்டில் ஹவுஸ்மெட்டுகள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நடித்து காட்டுகிறார். அதில் நமீதா எப்போதும் மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பாங்க என்பதை செய்து காட்டுகிறார். அதேபோல, பிரியங்கா தொடர்ந்து பிக் பாஸை கலாய்த்து வருவதை வைத்து ஓய் பெருசு... கேட்குதா என்று பிரியங்காவை பங்கமாக கலாய்க்கிறார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டில் ஒன்னானோம்... டான்ஸ் ஆடி ப்ரண்டானோம் என்று ஒன்றாக கத்துகிறார்கள்.

பிரியங்கா செம கலாய்
இதையடுத்து, பிரியங்கா வயிற்றில் தலகாணியை வைத்துக்கொண்டு ஏல நீ அண்ணாச்சியா.... நான் அண்ணாச்சியா என்று இமான் அண்ணாச்சியை கலாய்க்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது இன்னைக்கு கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











