டிக்கெட் டு ஃபினாலே... வெல்லப்போவது யார்.. அமீரா, சிபியா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 5' இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், நேரடியாக ஃபைனலுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

Bigg Boss Season 5 Ticket To Finale WINNER | First FINALIST | Ameer, Ciby

நிரூப், பாவனி, அமீர், ராஜூ, பிரியங்கா, சஞ்சீவ், தாமரைச் செல்வி, சிபி என எட்டு போட்டியாளர்களும் இந்த 'Ticket To Finale' போட்டியில் கலந்து கொண்டார்கள்.

நிரூப், தாமரை, பாவனி, ராஜூ, பிரியங்கா இந்தப் போட்டியிலிருந்து வெளியேறியதை அடுத்து சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் 'Ticket To Finale'விற்காக போட்டி போட்டனர்.

பிக் பாஸ் டாஸ்க்

பிக் பாஸ் டாஸ்க்

இதில் போட்டியாளர்கள் வரிசையாக கட்டம் போட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்கள் கையில் சிவப்பு மற்றும், பச்சை விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்களின் பதில்களும், பார்வையாளர்களாக இருக்கும் போட்டியை விட்டு வெளியேறியவர்களின் பதிலும் ஒன்றாக இருந்தால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள்.

சஞ்ஜீவ் கேட்ட கேள்வி

சஞ்ஜீவ் கேட்ட கேள்வி

இந்த டாஸ்கில் எக்குதப்பான கேள்விகளை கேட்டு அமீர், சிபி, சஞ்ஜீவ்வை திணறடித்தனர். அதுவும் பிக் பாஸ் வீட்டில் 76வது நாளில் கறி சமைத்தோமா இல்லையா என்று கேட்டு அனைவரையும் கடுப்பாக்கினார் சிபி. இதற்கு சரியான பதிலைக் கூறி வெற்றி பெற்றார் அமீர்,அதேபோல தாமரை உண்மையில் வெகுளியா இல்லை நடிக்கிறாரா என்று சஞ்ஜீவ் கேட்ட கேள்விக்கு அனைவரும் கூறிய பதிலை கூறி சிபியும் வெற்றிபெற்றார்.

அமீர் வென்றாரா

அமீர் வென்றாரா

அமீரும், சிபியும் அடுத்த போட்டிக்கு முன்னேறினர். மேலும், அமீருக்கும் சிபிக்கும் இன்று கடுமையாக போட்டி நடைபெறுகிறது. இதில், அமீர் ஃபினாலே டிக்கெட்டை வெல்வாரா... அல்லது சிபி வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் அமீர் வெற்றி பெற்று ஃபினாலே டிக்கெட்டை வென்றதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

வெளியேறப்போவது யார்

வெளியேறப்போவது யார்

சஞ்சீவ் இறுதி வரை சென்று 'Ticket To Finale' பட்டத்தை நழுவவிட்டுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X