Don't Miss!
- News
"முதலிரவு".. பெண்ணை கடித்து குதறிய மாப்பிள்ளை.. "திருநங்கையா"?.. முரட்டுத்தனமான வக்கிர நபர் கைது
- Finance
என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு... டிராபியுடன் செல்ஃபி...தீயாய் பரவும் போட்டோ
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் இன்று நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிக்கு துவங்கி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நொடிக்கு நொடி மக்களின் ஓட்டு நிலவரம் மாறி வருவதால் டைட்டில் வின்னர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரி, இன்று நடக்கும் ஃபினாலேவில் பங்கேற்கவில்லை எனவும், விஜய் டிவி தனக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் பகிரங்கமாக ட்விட்டரில் கூறி இருந்தார். முக்கிய போட்டியாளரான பிரியங்காவும் காலில் வலி என வீட்டில் இருந்து வெளியேறி விட்டதால் அவரும் ஃபைனலில் பங்கேற்பாரா என பல கேள்விகள் எழுப்பப்பட்டது.
மிஷ்கின் படத்திலயும் நான் தான் வில்லன்... குஷியில் கார்பன் ஹீரோ

நேரடி ஒளிபரப்பு இல்லை
இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல் ரெக்கார்டட் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது. ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் நேற்று காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதனால் டைட்டில் வின்னர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருப்பார்கள், வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள இன்று இரவு வரை காத்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எழுந்தது.

ராஜு டைட்டில் வின்னர்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் ராஜு எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதில் கையில் பிக்பாஸ் டிராபியுடன் ராஜு போஸ் கொடுத்துள்ளார். இதனால் டைட்டில் வின்னர் அவர் தான் என்பது உறுதியாகி விட்டது. வின்னர் யார் என்ற சஸ்பென்சை இப்படி உடைத்து விட்டார்களே என அனைவரும் கூறி வருகிறார்கள்.

டிஆர்பி போய் விடுமே
எப்போதும் வின்னர் யார் என்பதை விஜய் டிவி கடைசி நிமிடம் வரை சஸ்பென்சாக வைத்திருக்கும். இதனால் இதை தெரிந்து கொள்வதற்காக நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், டிஆர்டி.,யும் தொடர்ந்து அதிகரித்து வரும். ஆனால் இந்த முறை எப்படி அனைத்தும் முன்கூட்டியே தெரியும் படி வைத்து விட்டார்கள். இதனால் டிஆர்பி பாதிக்கப்படுமே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் தான் ரன்னர் அப்
பிரியங்கா தான் ரன்னர் அப் வாங்கி உள்ளாராம். நிரூப் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியில் வந்த கையோடு ராஜுவின் அம்மா, தாமரை, ஐக்கிய பெர்ரியை சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோ ஏற்கனவே வெளியாகி உள்ளது. இவரைத் தொடர்ந்து அமீரும், அவரைத் தொடர்ந்து பாவனியும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.