ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. கடும் வாக்குவாதம்.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு.. பகீர் கிளப்பும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகி மிரள வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து ஷேர் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த டாஸ்க்கிலேயே போட்டியாளர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுவதாக தெரிந்தது. இசைவாணி தனது கதையை கூறும் போது கண்ணீர் விட்டு அழுதார்.

ட்ரோல் மெட்டீரியல் ஆன அபிஷேக்

ட்ரோல் மெட்டீரியல் ஆன அபிஷேக்

அபிஷேக் ராஜா, கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசும் போதே அழுது தீர்த்தார். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல் மெட்டீரியல் ஆன அபிஷேக் ராஜா. இதேபோல் பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின.

மூன்றாம் நாள் முதல் புரமோ

மூன்றாம் நாள் முதல் புரமோ

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பமானது தெரியவந்துள்ளது. அதாவது ஆக்டிவிட்டி ஏரியாவில் இன்றும் கடந்து வந்த பாதை டாஸ்க் செல்கிறது.

இமான் அண்ணாச்சி கஷ்டங்கள்

இமான் அண்ணாச்சி கஷ்டங்கள்

இதில் நடிகர் இமான் அண்ணாச்சி தான் கடந்து வந்த பாதையையும் பட்ட கஷ்டங்களையும் சக போட்டியாளர்களுடன் தனக்கான மேடையில் இருந்து பகிர்ந்து கொள்கிறார். நகைச்சுவை செய்யும் ஒரு காமெடியன் இந்த பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிறார்.

ஒரு பொஸிஷனுக்கு போக முடியும்

ஒரு பொஸிஷனுக்கு போக முடியும்

அப்போது எழுந்து பேசும் நாடியா சங் அதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறார். தொடர்ந்து பேசும் நமிதா மாரிமுத்து, கஷ்டப்படுறோம் கஷ்டப்படுறோம்னு சொன்னால் கஷ்டப்பட்டால்தான் ஒரு பொஸிஷனுக்கு போக முடியும் என்று கூறுகிறார்.

சிரிச்சது தப்பா அண்ணே?

சிரிச்சது தப்பா அண்ணே?

அவரை தொடர்ந்து ஆரம்பிக்கும் நிரூப், இமான் அண்ணாச்சியிடம் நீங்க பேசும் போது சிரிச்சது தப்பா அண்ணே எங்கிறார். அதற்கு இமான் அண்ணாச்சி, அதெல்லாம் இல்லையே சிரிக்கலாமே.. தப்பில்லையே தவறு கிடையாதே என்கிறார்.

எனக்கு சரியா படலடா..

எனக்கு சரியா படலடா..

ஆனால் அப்போது நிரூப் அருகில் அமர்ந்திருக்கும் நடிகர் சிபி, எனக்கு அது சரியா படலடா என்கிறார். இதனால் நிரூப்புக்கும் சிபிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தொடர்ந்து பேசும் சிபி ஏன்டா சிரிக்கிற கம்முன்னு இருடா என்றப்படியே எழுந்து செல்கிறார்.

என்ன வேணா பேசு..

என்ன வேணா பேசு..

பின்னர் நிரூப்பும் அபிஷேக் ராஜாவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். அப்போது அபிஷேக் ராஜா என்ன வேணா பேசு என்று நிரூப்பிடம் கத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும் நமிதா மாரிமுத்து சண்டை ஆரம்பிக்க போகுது வீட்டுல என்கிறார். முதல் புரமோவின் மூலம் பிக்பாஸ் வீடே ரணகளமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இன்னைக்கு நல்ல எண்டெர்டெய்ன்மென்ட்

இன்னைக்கு நல்ல எண்டெர்டெய்ன்மென்ட்

பிக்பாஸ் வீட்டில் இம்முறை பெண் போட்டியாளர்கள் அதிகம் இருப்பதால் முதலில் அவர்களால் தான் பிரச்சனை ஏற்படும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. ஆனால் முதலில் ஆண் போட்டியாளர்களே வீட்டுக்குள் பிரச்சனையை ஆரம்பித்துள்ளனர். புரமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நல்ல எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X