நீ என்ன பெரிய அப்பாட்டக்கரா.. உன்னை வச்சு செய்றேன்.. நிரூப்பை வெளுத்து விட்ட வருண்!
சென்னை: பிக் பாஸ் புரமோவில் சண்டை வராதா? என காத்திருந்த ரசிகர்கள் எல்லாம் தற்போது காமெடி வராதா? என எதிர்பார்க்கும் அளவுக்கு ஏகப்பட்ட சண்டை புரமோக்கள் குவிந்து வருகின்றன.
ஆனால், அதெல்லாம் சிறப்பாக இல்லை என்றும் சிரிப்பாகத் தான் உள்ளது என்பதும் தனிக் கதை.
இன்றைய பிக் பாஸ் 3வது புரமோவில் நீர் ஆளுமையுடன் வீட்டை ஆட்சி செய்து வரும் வருண் மற்றும் நிரூப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நீர் ஆளுமை
நெருப்பு ஆளுமையை கொண்டு இசைவாணியும், நிலம் ஆளுமையை கொண்டு நிரூப்பும் ஆகாயம் ஆளுமையை கொண்டு பாவனியும் இந்த பிக் பாஸ் வீட்டை ஆட்சி செய்து வந்த நிலையில், இந்த வாரம் நீரின் ஆளுமையை கொண்டு வருண் பாத்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வருகிறார்.

வம்பு பண்ணும் வருண்
பெண் போட்டியாளர்கள் மற்றும் ஆண் போட்டியாளர்கள் என யாராவது குளிக்கப் போனால் உடனடியாக ஷவரை ஆஃப் செய்து விட்டு அவர்களை கதற விடும் வேலையை கரெக்ட்டாக செய்து வருகிறார் வருண். மேலும், பாத்ரூம் பயன்படுத்த வருபவர்களுக்கு சின்ன சின்ன டாஸ்க்குகளை கொடுத்து அவர்களின் அவசரம் புரியாமல் நடந்து கொள்கிறார்.

மதிக்காத நிரூப்
நிரூப் ஆட்சி செய்யும் போது மற்ற போட்டியாளர்கள் எல்லாம் நிரூப்பின் பேச்சைக் கேட்டு நடந்தனர். ஆனால், பாவனி ஆட்சி செய்யும் போது நீ சொல்றதை நான் ஏன் கேட்கணும் என்றும் நீ பார்ஷியலா தண்டனை கொடுக்கிற என்றும் சண்டைக்கு போனார் நிரூப். ரூலர் யாருக்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தண்டனை கொடுக்க அவருக்கு உரிமை உள்ளது என்பதை மறந்து விட்டு தனி டிராக்கில் நிரூப் பயணித்து வருகிறார்.

வருண் நிரூப் சண்டை
பெண்கள் பேசினால் மட்டும் தான் கேட்க மாட்டேங்குறாங்க என அழுது புலம்பிய பாவனிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வருணின் பேச்சையும் நிரூப் தற்போது கேட்கவில்லை. அதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஆக்ரோஷ மோதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

சதித்திட்டம்
நேற்றைய எபிசோடில் கடந்த வாரம் சண்டை போட்ட பாவனி உடன் இணைந்து நான் உன் மீது வெறும் மக்கை ஊற்றுவது போல நடிக்கிறேன். தண்ணீர் இருக்கும் மக் கொண்டு வருண் அக்ஷரா மீது தண்ணி ஊற்றினால் இருவருக்கும் இடையே மோதல் உண்டாகும் ஒன்றாக சுற்றித் திரிபவர்கள் பிரிந்து விடுவார்கள் என ரியல் சகுனியாக மாறி சதித்திட்டம் செய்தார் நிரூப். அதுதான் இந்த சண்டைக்கு காரணமா? என்பதை எபிசோடு பார்த்தால் தெரிந்து விடும்.

பெரிய அப்பாட்டக்கரா
வருண் சொல்வதை கேட்க முடியாது என எழுந்து நகரும் நிரூப்பை பார்த்து ஹைட்டா இருந்தா நீ என்ன பெரிய அப்பாட்டக்கரா என்றும் உன்னைய வச்சி செய்றேன் பாரு என வருண் பொங்கிய பவர்ஃபுல் புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை இன்றைய எபிசோடுக்காக எதிர்பார்க்க வைத்துள்ளது.

கமல் கொடுத்த ஃப்ரீடம்
கடந்த சீசனை விட இந்த சீசனில் தடித்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் என போட்டியாளர்கள் வரம்பு மீறி சென்று கொண்டே இருக்கின்றனர். ராஜு ஜெயமோகன் நடு விரலை காட்டி பாவனியிடம் பேசியதாகவும் பாவனி ரசிகர்கள் வீடியோக்களை வெளியிட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆரம்பத்திலேயே போட்டியாளர்களை அடக்கி வைக்காமல் கமல் கொடுத்த ஃப்ரீடம் காரணமாகத் தான் போட்டியாளர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











