கிறுக்குத்தனமா பேசுவான்.. அபிஷேக்கை கலாய்த்த பிரியங்கா.. அந்த வீடியோவை பார்த்துருப்பாங்களோ?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மோசமாக கலாய்த்த அபிஷேக் ராஜா, இப்போ அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பது தான் இந்த சீசனின் 'ஓப்பன் பண்ணா' டிரெண்டிங்கே என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
யூடியூப் விமர்சகரான அபிஷேக் சும்மாவே வேற லெவல் பேசுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் அவரது பேச்சுக்கள் ரசிகர்களை ரொம்பவே இரிடேட் ஆக்குவதாக மீம்கள் பறக்கின்றன.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் இரண்டாம் நாளில் தொகுப்பாளினி பிரியங்கா அபிஷேக்கை கிறுக்குத்தனமா பேசுவான் என கலாய்த்திருப்பது வேற லெவல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓயாத வாய்
பேச்சுத் தான் பிழைப்பே என்றான நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ள அபிஷேக் அந்த வீட்டிலும் ஆரம்பத்தில் இருந்தே ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். பல இடங்களில் தேவையில்லாமல் மூக்கை அவர் நுழைப்பதாகவும் பிக் பாஸ் ரசிகர்கள் ஆரம்பத்திலேயே அபிஷேக்கை ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசனையே படு மோசமாக கலாய்த்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அபிஷேக் ராஜா பேசிய வீடியோ இணையத்தில் பல பிக் பாஸ் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்காவும் பார்த்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பது இன்றைய அவரது பேச்சிலேயே தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

தரையில் படுத்துக் கொண்டே டான்ஸ்
எந்த பாடல் போட்டாலும் தரையிலேயே படுத்துக் கொண்டே டான்ஸ் ஆடி ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பெரிய புட்டி கண்ணாடி ஒன்றை போட்டுக் கொண்டு வித்தியாசமான பாடி லாங்குவேஜில் மற்ற போட்டியாளர்களை கலாய்த்து வந்த நிலையில், இன்று அபிஷேக்கையும் வச்சு செய்து விட்டார்.

கிறுக்கு பையன்
நான் எப்போதும் உங்க டீம் தான் என அபிஷேக் ராஜா சொல்லும் போது, ஜெர்க்கான பிரியங்கா அபிஷேக் ராஜா போன பிறகு முன்னாடி ரொம்ப கிறுக்குத் தனமா பேசிட்டு இருப்பான். ஆனால், இங்கே பரவா இல்லை சமத்தாதான் பேசுறான் என பிரியங்கா அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்த்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











