பிக் பாஸ் தமிழ் சீசன் 5: யாருக்கு அதிக ஓட்டு? யார் கடைசி இடத்தில்? எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதி கட்டத்தை நெறுங்கி விட்டது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது.

கமல் இந்த சீசனில் அடிக்கடி சொல்வது போல எதிர்பாராததை எதிர்பார்க்க நேரிடுமோ என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வாரம் யார் மக்களின் அதிக ஓட்டுக்களை அள்ளி உள்ளார். யார் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

கிராண்ட் ஃபினாலே

கிராண்ட் ஃபினாலே

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 5வது சீசனாக வெற்றி பெற்ற டைட்டில் வின்னரின் கையை தூக்கி கமல் காட்ட காத்திருக்கிறார். இந்த சீசனில் யார் வேண்டுமானாலும் டைட்டில் வின் பண்ணலாம் என தொடர்ந்து வெளியேறிய போட்டியாளர்களும் வாய் கூசாமல் சொல்லி வருவதற்கு பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களின் ஓட்டுக்களே முடிவு செய்யும்

மக்களின் ஓட்டுக்களே முடிவு செய்யும்

திங்கள், செவ்வாய், புதன் என மூன்று நாட்களாக மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். அதே சமயம் இதனை கண்காணிக்கும் விதமாக அன் அஃபிஷியல் போலிங்கும் பல இணைய தளங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவது போல நடத்தி வருகின்றன. மக்களின் ஓட்டுக்கள் தான் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளரை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடத்தில் அமீர்

கடைசி இடத்தில் அமீர்

டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் நபராக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்த அமீர் தான் கிராண்ட் ஃபினாலே அன்று முதல் நபராக எவிக்ட் ஆகி வெளியே வரப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 11.27 சதவீத ஓட்டுக்களுடன் அமீர் கடைசி இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் நிரூப்

4வது இடத்தில் நிரூப்

இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக கோல்மால் செய்து பிக் பாஸ் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்த நிரூப் 12.9% ஓட்டுக்களுடன் 4வது இடத்தில் உள்ளார். யாஷிகா ஆனந்தே உள்ளே நுழைந்து நிரூப்பை கையோடு அழைத்துச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது இடத்தில் பாவனி

3வது இடத்தில் பாவனி

நிரூப் என்ன தான் சித்து வேலைகளை செய்து இந்த கேமில் விளையாடி முன்னேற பார்த்தாலும் ரசிகர்கள் மத்தியில் மூன்றாவது இடம் நிரூப்புக்கு பதிலாக பாவனிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 14.42% ஓட்டுக்களுடம் பாவனி 3வது இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்துக்கு பாவனியை முன்னேற்ற அவரது ஆர்மியினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

ரன்னர் அப் பிரியங்கா

ரன்னர் அப் பிரியங்கா

கமல் கடைசியாக ராஜு மற்றும் பிரியங்காவின் கைகளை தான் பிடித்துக் கொண்டு பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடைக்கு வருவார் என்றும் பிரியங்கா தான் இந்த சீசனில் ரன்னர் அப் என்றும் ஓட்டுக்கள் மூலம் தெளிவாகி உள்ளது. 20.38% ஓட்டுக்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.

டைட்டில் வின்னர் ராஜு

டைட்டில் வின்னர் ராஜு

41.02% ஓட்டுக்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் ராஜு ஜெயமோகன். ஒவ்வொரு வாரமும் மக்கள் ஓட்டுக்களுடன் முதல் நபராக சேவ் ஆகி வரும் ராஜு இந்த சீசனின் டைட்டிலை தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜுவின் ஆர்மியினர் வேறு யாரும் முந்திவிடக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த 10 ஓட்டுக்களையும் தினமும் ராஜுவுக்கே போட்டு வருகின்றனர்.

பீதியை கிளப்பும் வதந்தி

பீதியை கிளப்பும் வதந்தி

கள நிலவரம் இப்படி இருக்க விஜய் டிவி வேறு ஒரு பிளான் போட்டிருப்பதாகவும் ராஜு மற்றும் பிரியங்காவுக்கு பதிலாக நிரூப் அல்லது பாவனி டைட்டிலை வெல்வார் என்றும் கிளப்பி விட்டு வருகின்றனர். ஓட்டுக்கள் அடிப்படையில் ராஜு தான் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்றும் விஜய் டிவி ஓட்டுக்களை தாண்டி இந்த விஷயத்தில் எந்தவொரு ரிஸ்க்கையும் கிராண்ட் ஃபினாலேவில் எடுக்காது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X