திருடும் டாஸ்க்கில் இறங்கி கேம் ஆடிய பெண்கள்.. யாருக்கு கிடைக்கப் போகுதோ அந்த ஜாக்பாட் வாய்ப்பு?

சென்னை: ஆண் போட்டியாளர்களை விட இந்த முறை அத்தனை பெண் போட்டியாளர்களும் திருடும் டாஸ்க்கில் மிகவும் மும்முறமாக களமிறங்கி விளையாடினர்.

Recommended Video

Bigg Boss விட்டு Namitha வெளியேறிய இதுதான் காரணமா?

முதல் நபராக காயினை சுட்டது நம்ம தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி அக்கா தான்.

கம்முனு இருந்த மதுமிதா காயினை எடுத்து அதை நைஸா பிரியங்காவுக்கு கொடுக்கிற அளவுக்கு டெவலப் ஆகிட்டாங்க..

களவாடும் பெண்கள்

களவாடும் பெண்கள்

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என பஞ்ச தந்திர காயின்களை (பிக் பாஸ் சீசன் 5ஐ குறிக்கிறாங்களாம்) திருடும் போட்டி பிக் பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது. ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் பக்காவாக குரூப் சேர்த்துக் கொண்டு காயின்களை அபேஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் நல்லா விளையாடுறீங்களே கேர்ள்ஸ் என லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

முதல் காயினை திருடியவர்

முதல் காயினை திருடியவர்

இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி உதவியுடம் முதல் காயினை நம்ம தஞ்சாவூர் தமிழச்சியான ஐக்கி பெர்ரி அக்கா தான் ஆட்டையை போட்டார். பெண் போட்டியாளர்கள் எளிதில் தங்கள் உடைகளுக்குள் காயினை ஒளித்து அதை அப்படியே சேஃப் ஆன இடத்தில் வைத்து விடுகின்றனர்.

டிரெஸ்சுக்குள் ஒளித்து

டிரெஸ்சுக்குள் ஒளித்து

ஐக்கி பெர்ரியை தொடர்ந்து மதுமிதா ஒரு காயினை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கினார். மாஸ் திருடி மதுமிதா என்றே பட்டம் கொடுத்து விடலாம் போல அந்த அளவுக்கு தரமான சம்பவத்தை செய்த அவர் அந்த காயினை பிரியங்காவுக்கு தாரை வார்த்து விட்டது தான் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

பக்கா பாவனி

பக்கா பாவனி

இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அழுதே டைட்டிலை வின் பண்ணிடுவது போல இருக்கும் பாவனி ரெட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு தன்னுடைய கிரஷ் அபிநய் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு பக்காவாக காயின்களை திருடி ஸ்மோக்கிங் ஏரியா அருகே புதைத்து வைத்த காட்சி எல்லாம் வேற லெவல்.

ஏமாந்த அக்‌ஷரா

ஏமாந்த அக்‌ஷரா

பாவனி ஸ்டோர் ரூமுக்குள் ஒளித்து வைத்த ஒரு காயினை ஸ்மோக்கிங் ஏரியாவுக்கு மாற்றிய நேரத்தில் ஸ்டோர் ரூமுக்குள் தான் அவர் ஒளித்து வைத்தார் என எண்ணிய அக்‌ஷரா எகிறி பார்த்து ஏமாந்து போனது செம ஜாலியாக இருந்தது. இப்போ தான் போட்டியாளர்கள் இந்த வீட்டில் கொஞ்சம் ஃபன் பண்ணி ரசிகர்களையும் என்டர்டெயின் செய்யத் தொடங்கி உள்ளனர்.

வேலைகாட்டிய வருண்

வேலைகாட்டிய வருண்

கேமராவுக்கு முன் அதிகமாக வராத வருண் இந்த போட்டியில் நீர் காயினை அபேஸ் செய்து ராஜு பாயிடம் சொல்லி விட்டு அவர் உதவியுடன் கேமராவில் அதனை காட்டி நானும் இந்த வீட்டில் இருக்கேன் பா என்பதை நல்லாவே பதிவு செய்து விட்டார்.

அபிஷேக் ஆட்டம் கம்மி

அபிஷேக் ஆட்டம் கம்மி

தாமரை செல்வி அபிஷேக் காலில் விழுந்த காட்சியை தவிர அதிகமாக அபிஷேக்கையும் பிரியங்காவையும் பிக் பாஸ் எடிட்டர்கள் ஃபோகஸ் பண்ணாமல் மற்ற போட்டியாளர்களை காட்டியதே நல்லா இருந்ததாகவும் இதையே ஃபாலோ பண்ணா ஷோ ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X