ஓப்பன் பண்ணா.. யாரு இந்த அபிஷேக் ராஜா? பிக் பாஸ் தமிழ் சீசன் 4வது போட்டியாளர் இவர் தான்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அட்டகாசமாக தொடங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியாளர் அறிமுகம் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Bigg Boss 5 Confirmed Contestant List | Kamal Hassan, BB 5 Grand Launch

ஏற்கனவே உத்தேச பட்டியலில் வெளியான பல போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் அறிமுகமாகி வருகின்றனர்.

முதல் போட்டியாளராக இசைவாணி, இரண்டாவது போட்டியாளராக ராஜு ஜெயமோகன், மூன்றாவது போட்டியாளராக மதுமிதா உள்ளே நுழைந்துள்ள நிலையில், 4வது போட்டியாளராக யூடியூபர் அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது நுழைந்துள்ளார்.

யார் இந்த அபிஷேக் ராஜா

யார் இந்த அபிஷேக் ராஜா

Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமான இவர், அதன் பிறகு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார். மேலும், பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானவர் அபிஷேக் ராஜா.

ராஷி கன்னாவின் பாய் பெஸ்டி

ராஷி கன்னாவின் பாய் பெஸ்டி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டியாக நடித்து அதர்வாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர் அபிஷேக் ராஜா.

கமல் பேட்டியில் தலையை காட்டியவர்

கமல் பேட்டியில் தலையை காட்டியவர்

கமல், விஜய்சேதுபதி மற்றும் கமல், ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிகளை தொகுத்து வழங்கியவர் அபிஷேக் ராஜா தான். அந்த பேட்டியில் அடிக்கடி எட்டிப் பார்த்து தலையை காட்டிய அவரை பலரும் கலாய்த்து இருந்தாலும், அந்த கமல் கனெக்‌ஷன் இப்போ அவரை பிக் பாஸ் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது.

அப்போ புதுப்பட விமர்சனங்கள்

அப்போ புதுப்பட விமர்சனங்கள்

அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில், இனி ஓப்பன் பண்ணா யூடியூப் நிகழ்ச்சியில் புதிய படங்களின் விமர்சனங்களை அபிஷேக் ராஜா கொடுக்க மாட்டாரா என அவரது யூடியூப் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தாலும், தினமும் அவரை பிக் பாஸ் வீட்டில் காண போகிறோமே என்கிற சந்தோஷத்திலும் உள்ளனர்.

பேச்சுக்கு பஞ்சம் இருக்காது

பேச்சுக்கு பஞ்சம் இருக்காது

பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா இடம் பெற்றுள்ள நிலையில், பேச்சு போட்டிகள் விவாதங்கள் எல்லாம் வந்தால் அண்ணன் அபிஷேக் ராஜா உள்ளே இறங்கி கலக்குவார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆட்டம் பாட்டத்துடன்

ஆட்டம் பாட்டத்துடன்

தான் ஒரு அமைதி விரும்பி என இன்ட்ரோ வீடியோவில் பேசிய அபிஷேக் ராஜா டமாலு டமாலு பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கமல் சாரின் தீவிர ரசிகரான அபிஷேக் ராஜா இந்த வீட்டில் 100 நாளில் எத்தனை விமர்சனங்களை செய்யப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

யார் என்னை எப்படி விமர்சனம் செய்தாலும், இந்த சீசனில் நான் நானாக இருந்து கலக்கப் போகிறேன் என கமல் சார் முன்னாடியே அபிஷேக் ராஜா கூறினார். பிக் பாஸ் வீட்டில் முதல் கேக் கொண்டாட்டமாக இந்த சீசனில் அபிஷேக் ராஜாவின் பிறந்தநாள் கேக் கட்டிங் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X