Don't Miss!
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்.. லீக்கான தகவல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் அந்தவொரு போட்டியாளர் யார்? என்கிற தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய செலிபிரிட்டிக்கள் இல்லாதது ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் எழ காரணமாக உள்ளது.
இவர் தான் வின்னர் ஆக வரவேண்டும் என ரசிகர்கள் ஒரே குரலாக சொல்லாமல், இந்த முறை யார் வந்தா என்ன வராவிட்டால் என்ன என்கிற ரேஞ்சுக்கு நிகழ்ச்சி டல் அடித்து விட்டது.
முதலில் கை வச்சது யாரு... உண்மையை சொன்ன விக்ரமன்... பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சர்ச்சை

தவிர்க்கும் பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை விட நெகட்டிவிட்டிக்கள் தான் அதிகம் கிடைப்பதாகவே பல பிரபலங்கள் கருதி அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதையே தவிர்த்து வருகின்றனர். விஜய் டிவிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு உடையவர்களையே போட்டியாளர்களாக கொண்டு வந்து நடத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

போரிங் சீசன்
ஆரம்பத்தில் ஜிபி முத்து வருகையால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அவர் அதிரடியாக வெளியேறிய நிலையில், அதன் பின்னர் சில ஸ்டன்ட்டுகள், சண்டைகள் போடப்பட்டு நிகழ்ச்சி பக்கம் கவனத்தை திருப்பினர். ஆனால், அதன் பிறகு சண்டைகள் மற்றும் சச்சரவுகள் இல்லாமல் சைலன்ட்டாக டாஸ்க் மட்டுமே போட்டியாளர்கள் விளையாடி வருவதால் ரொம்பவே போரிங்கான சீசனாக இந்த பிக் பாஸ் மாறிவிட்டதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த வார நாமினேஷன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஹவுஸ்மேட்கள் அசீம், விக்ரமன், ஏடிகே, ரச்சிதா, ஜனனி மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். இதில், மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற தகவல் தற்போது கசிந்து விட்டது.

எவிக்ஷன் ட்விஸ்ட் இல்லை
அனிதா சம்பத், சனம் ஷெட்டியை எல்லாம் எவிக்ட் செய்து வெளியே அனுப்பும் போது பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை வரிசையாக மிக்சர் போட்டியாளர்களையே செலக்ட் செய்து வெளியே அனுப்பி வருவதால், எவிக்ஷனிலும் எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லை. இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளரும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த போட்டியாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் எஸ்கேப்
இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஏன் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்பதே புரியாத புதிராக ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில், இந்த வாரமும் அவர் எஸ்கேப் ஆகி விட்டார் என்றே தகவல்கள் கசிந்துள்ளன.

ஏடிகே எவிக்ட்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எதிர்பார்த்ததை போலவே ஏடிகே வெளியேறி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் இருந்தவர் ஏடிகே தான். கேம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை மற்றவர்கள் பற்றி அதிகம் புறம் பேசிய போட்டியாளர் என்றும் அசீம் உடன் ஒரு முறை அசிங்கமாக சண்டை போட்டவர் என்றும் ஏடிகே அறியப்பட்டார். அடுத்த வாரம் மணிகண்டன், மைனா நந்தினி, ரச்சிதா, அமுதவாணன் உள்ளிட்டோரில் யார் வெளியேறுவார் என எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன.