ப்பா.. பயங்கரமான ஆளாச்சே.. விக்ரமனுக்கு எதிராக வெயிட்டான போட்டியாளரை உசுப்பேற்றி விடும் ஏடிகே!
சென்னை: யாரெல்லாம் எப்படி மாறுவாங்கன்னே தெரியல என ராம் ராமசாமியிடம் படுக்கையில் படுத்துக் கொண்டு ஏடிகே உசுப்பேற்றி விடும் காட்சிகள் தற்போது 2வது புரமோவாக வெளியாகி ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொள்ள பிஆர் டீமுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தேன்னு ஓப்பனாக சொன்ன பெரிய இடத்து பையன் ராம் ராமசாமி வந்ததில் இருந்தே மந்திரிச்சு விட்ட கோழியாக கண் வீக்கத்திற்கு கண்ணாடி போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார்.
இந்நிலையில், விக்ரமனுக்கு எதிராக அவரையா கொம்பு சீவி விடுறீங்க ஏடிகே என 2வது புரமோவுக்கு கீழ் நெட்டிசங்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஊமைக் குசும்பு
இதுவரை அசல் கோலார் மற்றும் அசீம் அருகே இருந்து கொண்டு அவர்களை உசுப்பிட்டு வந்த ஏடிகே இப்போ ராம் ராமசாமியை உசுப்பேற்றி வருகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இங்கே யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள் என்றும் ஏடிகே ராமிடம் பேசும் காட்சிகள் இன்றைய 2வது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

நல்ல விஷயமே அதுதான்
இந்த சீசனில் ஒருத்தரை மட்டுமே உயர்த்தி பிடித்து ஷோ செல்லும் அளவுக்கு இல்லாமல் இருப்பது தான் ஹைலைட்டே. யார் எப்படி மாறுவார்கள் என்றே தெரியவில்லை. யார் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாத அளவுக்கு போட்டியாளர்கள் வந்துள்ளனர். கடந்த சீசன்களில் எல்லாம் மற்ற போட்டியாளர்களை டம்மி ஆக்கிவிட்டு சிலர் டாப்பில் இருந்த நிலையில், இந்த சீசன் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

விக்ரமன் பற்றி
ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன் பற்றியெல்லாம் ராம் ராமசாமியிடம் பேசி வந்த ஏடிகே கடைசியாக விக்ரமன் பற்றியும் பேசிய காட்சிகளும், அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் போல எடிட் செய்துள்ள புரமோ வெகுவாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அடுத்த அசீமாக ராம் ராமசாமியை மாற்ற ஏடிகே முயற்சி செய்கிறாரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

விக்ரமன் மென்டாலிட்டி
நான் நேர்மையானவன், மற்ற யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்கிற ரீதியிலேயே விக்ரமன் விளையாடி வருகிறார் என்றும் அந்த மென்டாலிட்டி கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் ராமிடம் பற்ற வைத்து வருகிறார் ஏடிகே. இப்போதாவது எழுந்து சென்று ராபர்ட் மாஸ்டர் எல்லாம் தனது எதிரி இல்லை தைரியமாக விக்ரமனிடம் சண்டை செய்வாரா ராம் என ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











