வாயை மூடுன்னு சொல்லக் கூடாது.. விக்ரமனிடம் எகிறிய அமுதவாணன்.. தனாவும் தாண்டவம் ஆடுறாரே!

சென்னை: விக்ரமன் உடன் அமுதவாணன் மற்றும் தனலட்சுமி சண்டை போடும் புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடக்கும் பிசிக்கல் டாஸ்க் ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி வருகிறது. சிலரது உண்மையான முகத்திரையும் கிழிந்து வருகிறது.

இந்த வார பிசிக்கல் டாஸ்க்கில் அமுதவாணன் மற்றும் தனா ஏகப்பட்ட பித்தலாட்டங்களை செய்து விளையாடி வருகின்றனர் என ரசிகர்கள் ஒரு பக்கம் விளாசி வருகின்றனர்.

பர்சனல் அட்டாக் பண்ணாதே

பர்சனல் அட்டாக் பண்ணாதே

ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா விவகாரத்தை வைத்து விக்ரமன் உடன் அமுதவாணன் பெரிய பிரச்சனையை கிளப்பினார். இந்நிலையில், தன்னை பர்சனலாக அட்டாக் செய்ய வேண்டாம். கேம் டாஸ்க்கை விளையாட்டா விளையாடுங்க என அமுதவாணனை விக்ரமன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

வாயமூடுன்னு சொல்லாதே

வாயமூடுன்னு சொல்லாதே

கேமிங்கிற பெயரிலை என்ன செம்மையா பர்சனல் அட்டாக் பண்றீங்க நீங்க என விக்ரமன் விளாச, பொய், ரைட்டு, நோ இப்படித்தான் பேசணும், வாயை மூடிட்டு இருக்க நீ சொல்லாத என விக்ரமன் உடன் அமுதவாணன் சண்டை போட்டதும், அதற்குத்தான் ஸாரி சொல்லிட்டேனே என விக்ரமன் அமுதவாணன் உடன் விவாதம் செய்து வருகிறார்.

சொல்லிட்டு ஸாரி கேப்பியா

சொல்லிட்டு ஸாரி கேப்பியா

அதெப்படிங்க சொல்லலாம்.. சொல்லிட்டு ஸாரி கேப்பீங்களா? நான் சொல்லிட்டு ஸாரி கேட்கட்டுமா என அமுதவாணன் விக்ரமனை தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் காட்சிகள் இன்றைய 3வது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன பேச்சுவார்த்தை அப்படியே சத்தமாக சண்டை போடும் நிலைக்கு வந்த நிலையில், தொடர்ந்து, நீங்களும் தனலட்சுமியும் பர்சனல் அட்டாக் பண்றீங்க என விக்ரமன் பொங்கி விட்டார்.

தனலட்சுமி தாண்டவம்

தனலட்சுமி தாண்டவம்

பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமிக்காக அப்படி முட்டுக் கொடுத்த விக்ரமனுக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும் என்பது போல மொத்தமாக இந்த வாரம் வச்சு செய்து விட்டார் தனலட்சுமி, நீங்க பேசுறது மட்டும் தான் கரெக்ட்டுன்னு பேசாதீங்க விக்ரமன் அண்ணா என ஒரே ருத்ர தாண்டவம் ஆடும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமி மற்றும் அமுதவாணனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X