Bigg Boss Tamil 6: பர்சனல் விஷயத்தை நாம் எப்படி கேட்க முடியும்.. விக்ரமனை அப்படி திட்டிய அமுதவாணன்!

சென்னை: ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா விஷயம் குறித்து அமுதவாணனிடம் நைஸாக கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் விக்ரமன்.

பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் விளையாடி வரும் கேமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அமுதவாணனை பூஸ்ட் அப் பண்ணி ஃபைனல்ஸ்க்கு அனுப்பும் நோக்கில் விஜய் டிவி செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில், விக்ரமன் மற்றும் அமுதவாணன் இடையே திடீரென வெடித்திருக்கும் சண்டை பற்றிய ப்ரோமோ தற்போது விஜய் டிவி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ராபர்ட் ரச்சிதா விஷயம்

ராபர்ட் ரச்சிதா விஷயம்

கமல்ஹாசன் முன்பாகவே ராபர்ட் மாஸ்டர் தனக்கு ரச்சிதா மீதுள்ள கிரஷ் பற்றி வெளிப்படையாகவே கேட்டு விட்டார். ராபர்ட் மாஸ்டர் உங்க கிட்ட ஒண்ணு சொல்ல வராரே என்னன்னு புரியுதா என கேட்க, ரச்சிதா முறைக்காமல் சிரித்துக் கொண்டே அவரை ஹேண்டில் செய்து வருவதை பார்த்த ரசிகர்களுக்கு இருவருக்கும் இடையே கனெக்‌ஷன் ஏற்பட்டு விட்டதா என கேள்விகள் கிளம்பி உள்ளன.

விக்ரமன் ஆர்வம்

விக்ரமன் ஆர்வம்

கடந்த சீசனில் ராஜு பாய் பாவனிக்கும் அபிநய்க்கும் இடையே காதல் இருக்கா என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நடந்து கொண்ட அதே ஸ்க்ரிப்ட்டை இந்த முறை விக்ரமனிடம் பயன்படுத்தி வருகின்றனர் என்றே தோன்றுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுகுறித்து விக்ரமன் அமுதவாணனிடம் கேட்டதை வைத்து சண்டையை ஆரம்பித்துள்ளார் கேபிஒய் அமுது.

வெடித்த சண்டை

வெடித்த சண்டை

இதனால், இருவருக்கும் இடையே தற்போது பிக் பாஸ் வீட்டில் பெரிய சண்டையே வெடித்திருக்கிறது. அந்த காட்சிகள் அடங்கிய 3வது ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை இன்னைக்கு சரியான சம்பவம் இருக்கு போல என எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

பர்சனல் விஷயத்தை

பர்சனல் விஷயத்தை

ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா பக்கத்தில் இருக்கும் போது, சண்டையை அமுது அழகாக ஸ்டார்ட் பண்ண நிலையில், தான் விஜே கதிரவன் பற்றித்தான் கேட்டேன் என விக்ரமன் நாசுக்காக நகர முயற்சிக்க, பொய் சொல்லாதீங்க, பர்ஸனல் விஷயத்தை நான் எப்படி கேட்டுட்டு வந்து உங்க கிட்ட சொல்ல முடியும். உங்களுக்கு வேணும்னா நீங்களே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க என ஒரேயடியாக அமுது விக்ரமனிடம் எகிறிவிட்டார்.

இந்த வார பஞ்சாயத்து

இந்த வார பஞ்சாயத்து

கடந்த வாரமே கமல் அழகாக இந்த ரகசிய காதல் பஞ்சாயத்தை பிரஸ்மீட் வைத்து ஆரம்பித்து வைத்த நிலையில், இந்த வாரம் ராபர்ட் - ரச்சிதா மேட்டர் பெரிய பிரச்சனையை கிளப்புவது கன்ஃபார்ம் என தெரிகிறது. பிக்பாஸ் வீட்டில இதே மாதிரி சீன் இதுக்கு முன்னாடியும் நடந்துருக்கு.. ஆனால், இந்த சீசன்ல இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X