Bigg Boss Tamil 6: என்னை மட்டும் ஏன் கேட்கிறீங்க.. ஜட்ஜ் குயின்ஸியிடம் எகிறிய அமுதவாணன்!

சென்னை: பெண்கள் குளிப்பதை பாத்ரூம் ஓட்டை வழியே பார்த்தார் அமுதவாணன் என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்த நிலையில் தற்போது குயின்ஸியிடம் அவர் பிரச்சனை செய்வதை பார்த்து பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட வழக்குகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளையும் ரசிகர்கள் பார்த்து விட்டனர்.

ஜட்ஜ் பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் எல்லாம் அந்த சீட்டில் அமர்ந்து விட்டதாக விமர்சனங்களும் ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

கமல் வருவாரா

கமல் வருவாரா

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசன் இந்த வாரம் நிகழ்ச்சியை வழக்கம் போல தொகுத்து வழங்குவாரா? மாட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவர்களும் சில நாட்கள் ரெஸ்ட் எடுக்க அறிவுறுத்தி உள்ள நிலையில், சனிக்கிழமை அன்று எப்படி கமல் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுக்கான ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

செம மேட்டர் இருக்கே

செம மேட்டர் இருக்கே

இந்த வாரம் பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாறிய நிலையில், இதை வைத்து ஏகப்பட்ட அரசியல் கருத்துக்களை கமல் தாராளமாக சொல்லலாம். அதற்காகவே கமல் தனது ஓய்வையும் பொருட்படுத்தாது இந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது. அதிலும் கதிர் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மேலும், தொடுத்த வழக்கு பற்றி கமல் பேசினால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மணியை மாட்டிவிட்ட அமுது

மணியை மாட்டிவிட்ட அமுது

பிக் பாஸ் வீட்டில் எல்லா இடங்களிலும் காபி அல்லது டீ குடித்த கப்புகள் அங்கேயே கழுவாமல் வைக்கப்படுவதாக கதிர் கொடுத்த புகார் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆஜரான அமுதவாணன் நான் எடுத்து கழுவி வச்சிடுவேன். மணி தான் அப்படி பண்ண மாட்டார் என அழகாக அவரை கோர்த்து விட்டார்.

நான் தப்பு பண்ணிருக்கேன்

நான் தப்பு பண்ணிருக்கேன்

அதன் பின்னர் கூண்டில் ஏறிய மணிகண்டன் நான் தப்பு பண்ணிருக்கேன். இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. இனிமேல் அது போன்ற தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இது அனைவருக்குமான வழக்கு அனைவரும் இனிமேல் அந்த தப்பை செய்யாமல் இருக்க வேண்டும் எனமணி சொன்னதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கைதட்டினர்.

அமுது குயின்ஸி சண்டை

அமுது குயின்ஸி சண்டை

அப்போ அமுதவாணன் திடீரென சிரித்ததை பார்த்த ஜட்ஜ் குயின்ஸி நீங்க அங்க போய் உட்காருங்க என சொன்னதும்.. எல்லாருமே தான் சிரிச்சாங்க.. என்னை மட்டும் ஏன் கேட்கிறீங்க என ஜட்ஜ் என்றும் பாராமல் எகிறினார். நான் உங்களை அங்கே போய் உட்காரத்தானே சொன்னேன் என குயின்ஸி அமுதுக்கு பதிலடி கொடுத்த காட்சிகள் இன்றைய 2வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X