பிக் பாஸ் வீட்டில் மிட் நைட் மசாலா.. இங்கேயும் போர்வை காட்சிகள் ஆரம்பம்.. அசல் - நிவா அட்ராசிட்டி!
சென்னை: தெலுங்கு பிக் பாஸில் மட்டுமில்லை தமிழ் பிக் பாஸிலும் போர்வை காட்சிகள் மிட் நைட் மசாலா ரேஞ்சுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
அசல் கோலார் மற்றும் நிவாஷினிக்கு இடையே என்ன தாங்க பாஸ் நடக்குது என்றும் அசல் நிவாவை காதலிப்பது போல ஏமாற்றி வருகிறான் என்றும் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
நிவாவிடம் மட்டும் அசல் நெருக்கமாக இருந்திருந்தால் கூட ரசிகர்கள் மன்னித்து விட்டு இருப்பார்கள். ஆனால், ஜனனி, குயின்ஸி, மைனா என அனைத்து பெண்களிடமும் அசல் அத்துமீறி நடந்து கொள்வது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எல்லை மீறும் பிக் பாஸ்
24 மணி நேர நிகழ்ச்சியாக பிக் பாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வரும் நிலையில், ஆபாச வார்த்தைகளும், அத்துமீறும் காட்சிகளும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக நடக்கும் அளவுக்கு அரங்கேறி வருகிறது. நீச்சல் குளத்தில் மேலாடை இன்றி குளிப்பது பெண் போட்டியாளர்களிடம் அத்து மீறுவது என அசல் கோலார் ஏகப்பட்ட கோளாறுகளை செய்து வருவதாக அவர் மீது பிக் பாஸ் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் உள்ளனர்.

கடிப்பது கட்டிப்பிடிப்பது
நிவாஷினி அசல் கோலாரிடம் நட்பை தாண்டி பழகி வரும் நிலையில், எல்லை மீறி அவரை கட்டிப் பிடிப்பது, கைகளில் கடிப்பது என ரொம்பவே வரம்பு மீறி அசல் கோலார் ஏகப்பட்ட கோளாறுகளை பிக் பாஸ் வீட்டில் செய்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பயங்கரமாக கண்டிக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய எபிசோடில் நிவாஷினிக்கு ஒரு படி மேலே சென்று முத்தமும் கொடுத்துள்ளார்.

அசல் போர்வைக்குள்
அசல் தான் நிவாவையும் மற்ற பெண் போட்டியாளர்களையும் நோண்டுகிறார் என்று பார்த்தால், நிவாஷினி அதற்கு மேல் இருக்கிறார். அசல் கோலார் படுத்திருந்த படுக்கைக்கு சென்று அவரது போர்வையை விலக்கி செய்த சில்மிஷக் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் பதிவிடப்பட்டு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பக்கத்தில் படுத்துக் கொண்டு
அசல் கோலார் தூங்கும் போது, பக்கத்தில் மைனாவெல்லாம் அசந்து தூங்கிக் கொண்டிருக்க, நைஸாக இரவு நேரத்தில் அசல் கோலார் படுக்கைக்கு வந்த நிவாஷினி அவரது போர்வையை விலக்கி நோண்டும் காட்சிகளும், அவர் பக்கத்தில் படுத்துக் கொண்டு இருவரும் சிரிக்கும் காட்சிகளும் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இப்படி கெடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே என ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

அசலை வெளியே அனுப்புங்க
நிவாஷினியுடன் லவ் டிராக்கில் இருக்கிறார் டிஆர்பி எகிறுது என அசல் கோலாரை இந்த வாரம் எவிக்ட் செய்யாமல் பாவப்பட்ட புள்ள ஏடிகேவை வெளியே அனுப்பிடாதீங்க என்றும் அசல் கோலார் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும். அத்துமீறி அசல் நடந்து கொள்ளும் காட்சிகள் எல்லாம் பார்க்கவே அசிங்கமாக இருக்கு என புகார்கள் சோஷியல் மீடியாவில் குவிய ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











