அசல் கோலார் வெளியேற்றம்.. எல்லாம் என்னால தான என பாத்ரூமில் அழுது புலம்பிய நிவாஷினி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த சில்மிஷங்கள் குறித்தெல்லாம் கமல் பேசவே இல்லை. அதே போல பயண வீடியோவிலும் அதை பெரிதாக காட்டவில்லை.
நீ ஏன் வெளியே போறன்னு வெளியே போய் கேட்டு, பார்த்து தெரிஞ்சிக்கோ போ என கமல் சொல்லி அனுப்பியதெல்லாம் மரண கலாய் என பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மகேஸ்வரி சேவ்
கடந்த வாரத்தை போல இல்லாமல், இந்த வாரம் மகேஸ்வரி கடைசி 3வது நபராக காப்பாற்றப்பட்டார். தான் சேவ் ஆகிவிடுவோம் என ரொம்பவே அவர் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டார். அதன் பின்னர் கடைசி 2 பேரில் அசல் மற்றும் அசீம் அமர்ந்திருந்தனர். அசல் தான் சேவ் ஆக வேண்டும் என்பது ஏகப்பட்ட ஹவுஸ்மேட்களின் விருப்பமாக இருந்தது.

ரச்சிதா தனலட்சுமி
ஆனால், அசல் வெளியேறுவார் என்றும் அசீம் உள்ளே இருப்பார் என்பதையும் சரியாக கணித்து சொன்னது தனலட்சுமி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கரைத்துக் குடித்த ரச்சிதா தான். அவர்கள் இருவரும் சொன்னதை போலவே கடைசி இடத்தில் தள்ளப்பட்ட நிலையில், அசீம் சேவ் ஆனார்.

அசிங்கத்தோட போகக் கூடாது
அசீம் அண்ணா பண்ணது தப்பு தான். ஆனால், அந்த கில்ட்டியோட அவர் இந்த வாரம் வெளியே போகக் கூடாது. இங்கே இருந்து ஒரு நல்ல மனிதராகவே அவர் போக வேண்டும் என தனலட்சுமி சாணியை கரைத்து மூஞ்சியில ஊற்றாத குறையாக சொல்லி விட்டார் என நெட்டிசன்கள் தனலட்சுமிக்கு கை தட்டி வருகின்றனர்.

கதறி அழுத அசீம்
அசீம் இந்த வாரமும் சேவ் ஆன நிலையில், இதை விட பெரிய தண்டனை தனக்கு இருக்க முடியாது என கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. வழக்கம் போல யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக பாத்ரூமுக்கு சென்று அசீம் அழுதார்.

அசல் வெளியேற்றம்
ஏற்கனவே இந்த வாரம் அசல் கோலார் தான் வெளியேறுகிறார் என்கிற தகவல் லீக்கான நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அவர் எப்படி வெளியேறினார் என்கிற காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தான் ஏன் தான் இந்த இடத்துக்கு வந்தேன் என்றே தெரியல என அசல் சொன்னதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்னால தானா
அசல் போக மாட்டான் சார், அவன் இருக்கணும், எனக்காக இருக்கணும் என நிவாஷினி சொன்ன நிலையில், அசல் தான் இந்த வாரம் எவிக்ஷன் என கமல் கார்டை காட்டியதும் அழ ஆரம்பித்த நிவாஷினி என்னால தானா அசல் வெளியேறினான் என சக போட்டியாளர்களிடம் கேட்டார்.

பாத்ரூமில் அழுகை
பாத்ரூம் ஏரியாவின் உடை மாற்றும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அழ ஆரம்பித்த நிவாஷினி அடுத்ததாக படுக்கையறையில் ராபர்ட் மாஸ்டர் வந்து சமாதானம் செய்யும் வரை அழுது கொண்டே இருந்தார். அடுத்த வாரமே நீயும் வெளியே போய் அசல் உடன் டூயட் பாடு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

டிராமா ஓவர்
பிக் பாஸ் எடிட்டர் நிவாஷினி அசலுக்காக அழுது கொண்டிருப்பதை மட்டும் காட்டாமல், தனது குசும்புத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். கடைசியாக ஏடிகே உடன் செம ஜாலியாக சிரித்து பேசி அடுத்த ஆடு சிக்கிடுச்சு என்பது போல அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சியையும் காட்டி விட்டார். அடுத்த வாரம் நிவா யாருடன் நெருக்கமாக இருக்கப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











