பெய்டு ஹாலிடேஸ் எப்படி இருக்கு.. ரச்சிதா, மைனாவை நேரடியாக வெளுத்து வாங்கிய ஆடியன்ஸ்.. கதிர் நிலைமை?

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்களுடன் ஆடியன்ஸை பேச விட்டு ஆப்பு அடித்திருக்கிறார் கமல்ஹாசன்.

KH என அச்சிடப்பட்டுள்ள தொப்பியை எல்லாம் போட்டுக் கொண்டு அசத்தலாக என்ட்ரி கொடுத்த கமல் நாமே ரோஸ்ட் பண்ணா போரடிக்கும் என அரங்கத்தில் உள்ள ரசிகர்களை வைத்து வறுத்தெடுத்து இருக்கிறார்.

ரச்சிதா, மைனா நந்தினி மற்றும் கதிர் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் 3வது ப்ரோமோவில் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

வார நாட்களை விட இந்த சீசனில் வார இறுதி நாட்கள் ரொம்பவே சூடு பிடித்து வருகின்றன. சனிக்கிழமை எபிசோடை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடிலும் அசீம் பிக் பாஸ் வீட்டில் குரூபிஸம் இருக்கு என்றும் ஃபேவரிடிஸம் இருக்கு என மைனா நந்தினியும் மணிகண்டனும் செய்யும் லீலைகளை அம்பலப்படுத்தி விட்டார்.

மைனா நந்தினி மணிகண்டன் இடையே

மைனா நந்தினி மணிகண்டன் இடையே

மணிகண்டன் இளவரசனாக இருந்த போது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி விட்டு ஏமாற்றி விட்டதாக மைனா நந்தினி வழக்கு தொடுத்த நிலையில், அசீம் தற்போது மைனா நந்தினி மற்றும் மணிகண்டன் இடையே ஃபேவரிடிஸம் இருக்கு என சொல்ல நாங்க நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என கமல் முன்னாடியே மைனா நந்தினி பேசிய காட்சிகள் போன ப்ரோமோவில் வெளியாகின.

ஆடியன்ஸ் ரோஸ்ட்

ஆடியன்ஸ் ரோஸ்ட்

பிபி ரோஸ்ட் டாஸ்க் கொடுத்த போது வீட்டில் பல பேர் சரியாக ரோஸ்ட் பண்ணாத நிலையில் ஆடியன்ஸ்களிடம் மைக் கொடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பேச சொல்ல உள்ளே இருக்கும் போட்டியாளர்களை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

ஏன் வந்தீங்க கதிர்

ஏன் வந்தீங்க கதிர்

பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக கதிரவன் ஏன் வந்தீங்க என ஒரு ரசிகை எழுந்து கேள்வி கேட்டதும் நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதா என கதிர் அப்படியே அப்பவும் எதுவும் பேசாமல் ஷாக் ஆகி நின்று விட்டார். அனுபவத்திற்காக வந்தீங்க என்றால் நாங்க எல்லாம் பாவம் இல்லையா என வழக்கு போட்டாலும் வழுக்கியபடியே பேசும் கதிரை கலாய்த்து தள்ளிவிட்டார்.

வீடே வேஸ்ட்

வீடே வேஸ்ட்

அசீம், தனலட்சுமி இருவரும் தான் இந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுக்கிறாங்க என்பதற்காக நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா இந்த வீடே வேஸ்ட் என மற்றொரு ரசிகை சொல்லவும், அப்படியெல்லாம் இல்லைங்க என சனிக்கிழமையே சேவ் ஆன சந்தோஷத்தில் அசீம் மற்றும் தனா பம்மிய காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டது.

பெயிட் ஹாலிடேஸ்

பெயிட் ஹாலிடேஸ்

கடைசியாக உங்களோட பெயிட் ஹாலிடேஸ் எப்படி இருக்கு ரச்சிதா, மைனா என ஒரு ரசிகை கேட்க ஒட்டுமொத்த அரங்கே கைதட்டி ஆரவாரம் செய்தது. ரச்சிதா வழக்கம் போல வித்தியாசமான ரியாக்‌ஷனை காட்ட மைனா நந்தினி முகம் வெந்து போன காட்சிகள் இன்னைக்கு தரமான சம்பவம் காத்திருக்கு என்பதை உணர்த்துகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X