என்னடா நடக்குது அங்க.. அசீம் மீது ஏறி விளையாடும் மைனா.. ஷாக்கான பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அசீம் மீது மைனா நந்தினி யானை சவாரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார் மைனா நந்தினி.

நம்ம வீட்டுப் பிள்ளை, விருமன் மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பாடி ஷேமிங்

பாடி ஷேமிங்

மைனாவின் டயாப்பர் சைஸ் என்ன அவ்ளோ பெருச இருக்கு என யூடியூபர் ஒருவர் படு மோசமாக அடித்த கமெண்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவை பார்த்த மைனாவின் கணவர் யோகேஷ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க அந்த யூடியூபர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில், மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் அசீம் உடன் மைனா விளையாடும் புதிய வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

எல்கேஜி குழந்தையே நல்லா சொல்லும்

எல்கேஜி குழந்தையே நல்லா சொல்லும்

இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்களை தனித்தனியாக கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து அவர்களிடம் சில பொது அறிவு கேள்விகளை குழந்தைகளே டக்கென சொல்லும் கேள்விகளை கேட்டார். ஆனால், அதற்கு நம்ம மைனா நந்தினி சொன்ன பதில்கள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இதெல்லாம் எல்கேஜி குழந்தைகளே சொல்லும் என ட்ரோல் செய்து கலாய்த்தனர்.

அசீம் மீது ஏறி

அசீம் மீது ஏறி

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசீம் மண்டிப் போட்டு யானை போல நடந்து செல்ல அவர் மீது ஏறிக் கொண்டு மைனா நந்தினி யானை சவாரி செய்யும் வீடியோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. அசீம் உடன் அப்படி சண்டை போட்டு வந்த மைனாவா இது? இப்படி அவருடன் நெருக்கம் காட்டி வருகிறாரே என கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

என்ன கொடுமை இது

என்ன கொடுமை இது

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதே ஒரு பெரிய கொடுமையாக உள்ள நிலையில், இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை பார்க்கப் போகிறோமோ என அசீம் மற்றும் மைனா நந்தினி யானை சவாரி விளையாட்டு விளையாடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

கணவர் பார்த்தா

கணவர் பார்த்தா

ஏற்கனவே தனது மனைவி பற்றி வெளியே மோசமாக ட்ரோல் செய்பவர்களை வெளுத்து வாங்கி வரும் யோகேஷ் தற்போது அசீம் உடன் அவரது மனைவி மைனா நந்தினி இப்படி ஏறி உட்கார்ந்து விளையாடுவதை எல்லாம் பார்த்தால் மனசு கஷ்டப்பட மாட்டாரு என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X