Don't Miss!
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- News
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Bigg Boss Tamil 6: டைட்டில் வின்னராக அசீமுக்கு தகுதியே இல்லை.. வெளுத்து வாங்கும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: இந்த வீட்டில் டைட்டில் வின்னராக ஆவதற்கு இவருக்கு தகுதியே இல்லைன்னு யாரை நினைக்கிறீங்க என மீண்டும் அசீமை டார்கெட் செய்யும் விதமாகவே கமல்ஹாசன் கேள்வியை எழுப்ப ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீம் சார் என சொல்லும் அதிரடியான ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் நிறைவடைய போகிறது. அமுதவாணன் டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக கடைசி வாரத்துக்குள் நுழைந்து விட்டார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி உள்ள தகவல்கள் கசிந்து விட்டன.
பணம் வந்ததும் ஆளே மாறிட்டாங்களே..பிக் பாஸ் ஆயிஷாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பெட்டி யாருக்கு
வரும் வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அறிகுறியாக இந்த வாரமே பெட்டியை கொடுத்து ரச்சிதாவை வெளியே அனுப்பி உள்ள ப்ரமோ வெளியாகி உள்ளது. ரச்சிதா இந்த வாரம் வெளியேற உள்ள நிலையில், ஷிவின், விக்ரமன், அசீம், கதிரவன், அமுதவாணன், ஏடிகே மற்றும் மைனா பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பார்கள். இதில், அதிகபட்சம் பணப்பெட்டியை மைனா நந்தினி அல்லது கதிரவன் எடுத்துச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சொல்ல முடியாது இவங்க நமக்கு டைட்டில் தர மாட்டாங்கனு சொல்லி அசீம் கூட பெட்டியை எடுத்துச் செல்லலாம்.

டைட்டிலுக்கு தகுதியே இல்லை
இந்த வார இறுதி எபிசோடை சுவாரஸ்யமாக்க கமல்ஹாசன் இந்த சீசனில் டைட்டில் வெல்ல இந்த போட்டியாளருக்கு தகுதியே இல்லை என யாரை நினைக்கிறீங்க என கேட்டதுமே மற்ற எல்லாருக்கும் தகுதி இருப்பது போலவும் அசீம் ஒருவருக்கு மட்டுமே தகுதி இல்லை என அதிகபட்சமான ஹவுஸ்மேட்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அவர் மீது அடுக்கும் காட்சிகள் 3வது ப்ரமோவில் வெளியாகி அசீம் ஆர்மியை கலங்க வைத்துள்ளது.

வச்சு செய்வேன்
அடுத்தவங்களை இரிடேட் பண்றது மாதிரி பேசுறாரு, வச்சு செய்வேன்னு மோசமான கேம் ஆடி வருகிறார் அசீம் அவருக்கு நிச்சயம் இந்த டைட்டில் வின்னர் ஆக தகுதியே இல்லை என விக்ரமன், ஷிவின், ஏடிகே, ரச்சிதா, மைனா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ட்விஸ்ட் இருக்குமோ
ஆரம்பத்தில் அசீம் அதிக ஓட்டுக்களுடன் சேவ் ஆகி வந்த நிலையில், அவரது கேமை மாற்றவே பிக் பாஸ் டீம் சேவ் ஆர்டரை மாற்றி அமைத்தது என பலராலும் நம்பப்பட்டு வருகிறது. கடைசியில் அசீம் இந்த சீசன் டைட்டிலை தட்டித் தூக்கும் ட்விஸ்ட் இருக்குமோ என்றும் அசீம் ஆர்மியை ஒன்று திரட்டவே விஜய் டிவி இப்படியொரு வேலை செய்திருக்கிறது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

கலைமகனே கலங்காதே
ஹவுஸ்மேட்ஸ் ஒருத்தர் ஒருத்தராக அசீமுக்கு இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்ல தகுதி இல்லை என சொல்ல சொல்ல அசீமின் முகம் அப்படியே வாடிப் போவதை பார்த்த அசீம் ஆர்மியினர் கலைமகனே கலங்காதே.. நாங்க இருக்கோம்.. உனக்கு ஓட்டுப் போட்டு டைட்டில் வின்னராக மாற்றுகிறோம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். எல்லாம் இன்னும் 2 வாரத்தில் தெரிந்து விடும். அதன் பிறகு டைட்டில் வின்னரை கூட சில மாதங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் மறந்து விட்டு அடுத்த சீசன் போட்டியாளர்களை திட்டவும் சப்போர்ட் செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள்!