ச்சீ.. படுகேவலமா சண்டை நடக்குது.. சைலன்ட்டா வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்.. செருப்பு வரை வந்துடுச்சே
சென்னை: ரேங்கிங் டாஸ்க் கொடுத்து நாரதர் வேலையை நல்லாவே ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ்.
70வது நாளில் நடக்க வேண்டிய சண்டையை எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கிற்காக ஸ்க்ரிப்ட் டீம் இப்பவே பண்ண சொல்லி உத்தரவிட்டதா? என்கிற கேள்வி தான் எழுகிறது.
அசீம் இப்படிப்பட்டவரா? என யோசிக்கும் அளவுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் செருப்பு வரை வந்த சண்டையை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.

வொர்ஸ்ட் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வரலாற்றிலேயே இப்படியொரு மோசமான போட்டியாளர்களை ரசிகர்கள் பார்த்ததே கிடையாது என திட்டும் அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களின் நடத்தையும் ரொம்பவே மோசமாகி வருகிறது. மகேஸ்வரியின் தொடை தெரியுதுன்னு ராபர்ட் மாஸ்டர் சொல்வதும், அசல் கோலார் பெண்களிடம் நடக்கும் முறையும் அசீம் எகிறி கொண்டு சண்டை போடுவதும் என ஆண் போட்டியாளர்கள் ரொம்பவே வொர்ஸ்டாக உள்ளனர்.

வாடி போடின்னு பேச்சு
பெண் போட்டியாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது கூட தெரியாத அசீம் எல்லாம் எதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது ஏன் என்கிற கேள்வியை ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் அசீமை விளாசி வருகின்றனர். ரச்சிதாவை பார்த்து என்ன பண்ணி கிழிச்சீங்க என்றும் ஆயிஷாவை பார்த்து தூங்குறதை தவிர என்ன பண்ண என ஆரம்பிக்க கை நீட்டி பேசினார் என சொல்லி வாடி போடி என கத்த ஆரம்பித்தார் அசீம்.

செருப்பை கழட்டிய ஆயிஷா
வாடி போடின்னு சொல்லாதீங்க நான் உங்கள அவன் இவன்னு திட்டல என சொல்ல அப்படி தான் டி சொல்வேன், உன்னால என்ன பண்ண முடியும் என எகிற ஆயிஷா தனது ஷூவையே கழட்டி அடிக்க போய்விட்டார். ஆனால், அடிக்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான். விக்ரமனிடம் அசீம் அவன் இவன் சண்டை போட்ட நிலையில், பிக் பாஸ் வீடே ரணகளமாக மாறியது.

துணிவில்லை
அசீம் ஏன் ஆயிஷாவை அப்படி பேசினான் என கேட்க ஒருத்தருக்கும் துணிவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படியொரு சண்டையை போட்டியாளர்கள் போட்டுக் கொண்டிருக்க பிக் பாஸ் வாய்ஸ் அமைதியாகவும் ஆனந்தமாகவும் எப்படி சொல்லிக் கொடுத்தது போல சண்டை போட்டு சமாதானம் ஆகின்றனர். திறமையான நடிகர்கள் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாட்டையை சுழற்றுவாரா கமல்
இவ்வளவு கீழ்த்தரமாக பிக் பாஸ் வீட்டில் இதுவரை சண்டை நடக்கவில்லை என்றும் பாலாஜி முருகதாஸ் கூட செருப்பை கழட்டி தன்னைத் தான் அடித்துக் கொண்டார் என்றும் ஆண் போட்டியாளருக்கும் பெண் போட்டியாளருக்கும் இப்படியொரு வாக்குவாதம் நடந்தது இல்லை. இந்த வாரம் கமல் கண்டிப்பாக சாட்டையை சுழற்ற வேண்டும் என்றும் அவங்களே சமாதானமா போயிட்டாங்க, நாமும் கம்முனு இருப்போம் என கழண்டு கொள்ளக் கூடாது என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











