பிக் பாஸ் 6 வீட்டுக்குள் முதல் ஆளாக உள்ளே நுழைந்தவர் இவர் தானா? வேற யாரெல்லாம் இதுவரை போயிருக்காங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ள நிலையில், தற்போது இவிபியில் அதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக பங்கேற்றவர் முதல் மேலும், சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படி கசியும் தகவல்கள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ஹைப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்றுகிறது. அதே சமயம் சிலருக்கு நிகழ்ச்சியின் மீது ஈடுபாடு வராமல் போவதற்கு காரணமும் இப்படி தகவல்கள் முன்பாக கசிவதே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 பிக் பாஸ் ஷூட்டிங்

பிக் பாஸ் ஷூட்டிங்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஷூட்டிங் தற்போது பரப்பாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை சுமார் 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கே சென்று விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. அப்படி லீக்கான தகவல் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் யாரெல்லாம் உள்ளே போயிருக்காங்க என்பதை இங்கே பார்ப்போம்..

 ஜிபி முத்து - முதல் போட்டியாளர்

ஜிபி முத்து - முதல் போட்டியாளர்

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விடாமல் கமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். கமல் தொகுத்து வழங்கி வரும் பிரம்மாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஜிபி முத்து உள்ளே நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டே பிக் பாஸ் வீட்டுக்கு ஜிபி முத்து செல்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த வீட்டுக்கெல்லாம் மனுஷன் போவான்னான்னு பேசியிருந்த ஜிபி முத்து இந்த சீசனில் வேறு வழியில்லாமல் சென்று விட்டார் போல என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை கன்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது என்கின்றனர்.

 அசீம் - இரண்டாவது போட்டியாளர்

அசீம் - இரண்டாவது போட்டியாளர்

ஷிவானி நாராயணன் உடன் சீரியலில் நடித்த நடிகர் அசீம் கடந்த இரு சீசன்களாக பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டாக இப்போ வருவார், அப்போ வருவார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், 6வது சீசனில் 2வது போட்டியாளராக ஒரு வழியாக வந்து விட்டார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

 அசல் கோளாறு

அசல் கோளாறு

"ஜோர்த்தால" பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஹாட் டிரெண்டான கானா பாடகர் அசல் கோளாறு இந்த சீசனில் 3வது போட்டியாளராக பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் கானா பாடாகி இசைவாணி போட்டியாளராக பங்கேற்று இருந்த நிலையில், இந்த சீசனில் மற்றொரு கானா பாடகர் கலந்து கொள்கிறார்.

 திருநங்கை போட்டியாளர்

திருநங்கை போட்டியாளர்

கடந்த சீசனில் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் சிவின் கணேசன் 4வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன. இந்த முறையாவது திருநங்கை போட்டியாளர் பல நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

 ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் என்றாலே வனிதா விஜயகுமார் பெயர் ரசிகர்களுக்கு பரிட்சையமான ஒன்று. வனிதாவின் எக்ஸான ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார் என்பதே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் எதிர்பார்புகளையும் அதிகரித்து இருக்கிறது. 5வது போட்டியாளராக ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டாராம்.

 மாடல் ஷெரினா

மாடல் ஷெரினா

ரைசா வில்சன், மீரா மிதுன், மதுமிதா, ஸ்ருதி என ஏகப்பட்ட மாடல்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு சீசனாக வந்து சென்ற நிலையில், தற்போது இந்த சீசனில் ரசிகர்களை கவரும் விதமாக மாடல் ஷெரினா 6வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் என தெரிகிறது. இவரது பர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கப் போகுதுன்னு போக போக பார்ப்போம்.

 யாரு இந்த ஏடிகே

யாரு இந்த ஏடிகே

இலங்கையை சேர்ந்த ராப் பாடகரான ஆர்யான் தினேஷ் கனகரத்தினம் எனும் ஏடிகே இந்த பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக நுழைந்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. வழக்கம் போல இந்த முறையும் ராப் பாடகர், காமெடியன், நடன இயக்குநர்கள், மாடலிங் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும் யாரெல்லாம் வரப் போறாங்க என்பதை விரைவில் தெரிந்து கொள்வோம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X