twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாரிசு ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு டான்ஸ்.. குயின்ஸி, ஷெரினாவை பங்கமாக கலாய்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

    |

    சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெளியேறிய ஷெரினா மற்றும் குயின்ஸி இருவரும் ரீயூனியன் போட்டது மட்டுமின்றி விஜய்யின் வாரிசு பட பாடலுக்கும் நடனம் ஆடியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    போன வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்ஸி தொடர்ந்து ஏகப்பட்ட போட்டியாளர்களை சந்தித்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    கதிர் உடன் தனக்கு காதல் இல்லை என்றும் ஷிவினை வெறுப்பேற்றவே அப்படி பிராங்க் செய்தோம் என்றும் கூறியிருந்தார்.

     அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே: பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்... மனமுடைந்து போன ஹவுஸ்மேட்ஸ்! அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே: பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்... மனமுடைந்து போன ஹவுஸ்மேட்ஸ்!

    எலைட் க்ரூப்

    எலைட் க்ரூப்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடுமையாக கேம் ஆடி, சண்டைப் போட்டு, மக்களை சிரிக்க வைத்து, கருத்து பேசி பலர் ரசிகர்களை கவர்வர். ஆனால், ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கே ஒரு ஆடியன்ஸ் போலத்தான் வந்து விட்டு, நல்லா மற்றவர்கள் சமைத்ததை சாப்பிட்டு, தூங்கி விட்டு பாதி நாட்களை ஓட்டி விட்டு வெளியே கிளம்பி விடுவர். அந்த லிஸ்ட்டில் இந்த சீசனிலும் சில போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி உள்ளனர்.

    குயின்ஸி ஷெரினா ரீயூனியன்

    குயின்ஸி ஷெரினா ரீயூனியன்

    பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் நட்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்கள் ரீயூனியன் நடத்துவதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், ஷெரினா வெளியேறிய பின்னர் யாருமே அவரை சந்தித்தது போல தெரியாத நிலையில், தற்போது குயின்ஸி அவரை சந்தித்து நடனமாடி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

    ரஞ்சிதமே ரீல்ஸ்

    ரஞ்சிதமே ரீல்ஸ்

    பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ரீல்ஸ் பிரச்சனை எல்லாம் கிளம்பிய நிலையில், தற்போது குயின்ஸி மற்றும் ஷெரினா விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு இருவரும் இணைந்து போட்டுள்ள டான்ஸ் ரீல் வீடியோவை குயின்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

     கரண்ட் கம்பியை பிடிச்ச மாதிரி

    கரண்ட் கம்பியை பிடிச்ச மாதிரி

    வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாட்டையே நெட்டிசன்கள் துணி துவைக்கும் ஸ்டெப்ஸ் என கிண்டல் செய்து வந்த நிலையில், அந்த பாட்டுக்கு ரீல்ஸ் போட்டுள்ள குயின்ஸியையும் ஷெரினாவையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். கரண்ட் கம்பியை பிடிச்ச மாதிரி டான்ஸ் ஆடுறாங்க என கலாய்த்து வருகின்றனர்.

    செம க்யூட்

    செம க்யூட்

    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் செம க்யூட்டான போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஷெரினா மற்றும் குயின்ஸி தான் என்றும், அவர்கள் இருவரையும் சீக்கிரம் அனுப்பிவிட்டு இளைஞர்களை அந்த ஷோவையே பார்க்க முடியாமல் பண்ணிட்டாங்க என குயின்ஸியின் டான்ஸ் வீடியோவுக்கு கீழ் அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஐஸ் வைத்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Tamil 6 contestants Queency and Sherina dances for Vijay's Varisu Ranjithamey song in instagram page. Fans pouring troll comments and cute comments for their special reels.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X