Bigg Boss Tamil 6: 100வது நாளில் வந்த பண மூட்டை.. எடுக்கப் போறது இவர் தானா? கன்ஃபார்ம் பண்ண ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக 100வது நாளை எட்டி உள்ளது. இந்த சீசனின் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், கடைசியாக ரச்சிதாவும் உள்ளே நுழைந்துள்ளார்.

மேலும், இந்த முறை பணப்பெட்டிக்கு பதிலாக பணமூட்டை வீட்டுக்குள் வந்துள்ளது. அதிக பண தொகை கொடுக்கப் போவதில்லை என்கிற நிலையுடன் 3 லட்சம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தொகை அதிகரிக்கும் ப்ரமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

விக்ரமன், ஷிவின், அசீம், கதிர், அமுதவாணன் மற்றும் மைனா உள்ளிட்ட போட்டியாளர்களில் பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார் என்கிற கேள்விக்கு இந்த போட்டியாளர் தான் கண்டிப்பா பணத்தை எடுத்துச் செல்வார் என ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

எப்போ பாஸ் போவாங்க

எப்போ பாஸ் போவாங்க

ஜிபி முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர், அசல் கோலார், நிவாஷினி, ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், மகேஸ்வரி, குயின்ஸி, ராம், ரச்சிதா என பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து டேரா போட்டுள்ளனர். இந்த பழைய பீஸை எல்லாம் எப்போ பாஸ் வெளியே அனுப்புவீங்க என ரசிகர்கள் கிண்டல் செய்து ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பண மூட்டை

பண மூட்டை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலேவுக்கு செல்லாமல் ஒரு போட்டியாளர் பணப் பெட்டியுடன் நிகழ்ச்சியில் இருந்து இறுதி வாரத்தில் வெளியேறுவார். இந்நிலையில், இந்த வாரம் பண மூட்டையை உள்ளே அனுப்பி உள்ள நிலையில், அதை எடுத்துக் கொண்டு யார் வெளியேறுவார் என்கிற கேள்வியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3வது ப்ரமோ வெளியாகி உள்ளது.

கம்மியா ஏறுது

கம்மியா ஏறுது

கடந்த சீசனில் 5 லட்சம், 10 லட்சம் என அதிகரித்த பணப்பெட்டி 12 லட்சம் ரூபாயை எட்டிய நிலையில், அடுத்து 15 லட்சமாக மாறினால் யார் வேண்டுமானாலும் எடுப்பார்கள் என நினைத்த சிபி உடனடியாக அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். அதற்கு முன்னதாக கேபி வெறும் 5 லட்சம் மட்டுமே எடுத்துச் சென்றார். இந்நிலையில், இந்த முறை 3 லட்சம் பண மூட்டை 3 லட்சத்து 1000 முதல் 3 லட்சத்து 9 ஆயிரம் வரை ஏறும் காட்சிகள் இந்த ப்ரமோவில் இடம்பெற்றுள்ளன.

யார் எடுப்பா?

யார் எடுப்பா?

ஏற்கனவே பணப்பெட்டி வந்தால் எடுத்து விடுவேன் என கதிர் கூறிய நிலையில், அவர் தான் எடுத்துச் செல்வார் என ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினியும் பணப்பெட்டியை எடுத்துச் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரை தவிர மற்ற நான்கு பேரில் ஒருவர் பணப்பெட்டி எடுத்தால் செம ட்விஸ்ட்டாக இருக்கும் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X