Bigg Boss Tamil 6: வெளியே போக துடிக்கும் ஆயிஷா.. ரச்சிதா என்ன இப்படி சரியா ஜோஸியம் சொல்றாரு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வெற்றிகரமாக 28வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு கடைசி 2 பேர் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

சனிக்கிழமை எபிசோடில் விக்ரமன் மற்றும் அசீம் பெரிய பாராட்டுக்களுடன் சேவ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஷெரினா தான் என்பது உறுதியாகி விட்டது.

விளிம்பு நிலை

விளிம்பு நிலை

மகேஸ்வரி விளிம்பு நிலையில் இருந்து இந்த வாரம் தப்பித்த நிலையில், ஆயிஷா அந்த இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். விஜே கதிரவன் எதிர்பார்த்ததை போலவே 3வது நபராக சேவ் ஆன நிலையில், அழுது கொண்டே இருக்கும் ஆயிஷா தனது மலையாள தோழி ஷெரினாவுடன் ஒன்றாக அமர்ந்துள்ள காட்சிகள் 3வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளன.

நான் வீட்டுக்கு போறேன்

நான் வீட்டுக்கு போறேன்

கடந்த வாரம் போர்ட்ரே பண்ணாதீங்க என கமலிடமே வம்புக்கு சென்ற ஆயிஷா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு எப்படியாவது வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்தனர். கடைசி இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆயிஷாவிடம் கமல் கேட்டதுமே, நான் வீட்டுகுப் போறேன் சார் என தலையை வழக்கம் போல குனிந்துக் கொண்டே சொல்லி விட்டார்.

50 - 50

50 - 50

நீங்க என்ன நினைக்கிறீங்க ஷெரினா எனக் கேட்டதுமே இன்னமும் நம்பிக்கையுடன் 50 - 50 இருக்கு சார். எதுவென்றாலும் ஓகே தான் என கிளம்ப முழு மனமே இல்லாமல் ஷெரினா பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏடிகேவை எழுப்பி கேட்டதும் அவரும் ஆயிஷா தான் சேவ் ஆவார் என அக்யூரேட்டாக சொல்லி விட்டார்.

 ரச்சிதா ஜோஸியம்

ரச்சிதா ஜோஸியம்

இந்த சீசனில் ரச்சிதாவின் ஜோஸியம் தொடர்ந்து பலித்து வருவதால், இந்த முறையும் ரச்சிதாவிடம் கெஸ் பண்ண கமல் கேட்டதுமே, ஷெரினா வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கு என வெளிப்படையாக கூறிவிட்டார். எப்படி கரெக்ட்டா ரச்சிதா எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறாங்க என்கிற க்யூரியாசிட்டியே ரசிகர்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.

தயங்கிய தனலட்சுமி

தயங்கிய தனலட்சுமி

ஷெரினா இந்த வாரம் வெளியேற காரணமாக இருந்த தனலட்சுமியிடமே கேட்டு விடலாம் என கமல் கேட்க ரொம்பவே தயங்கிய தனலட்சுமி ஆயிஷா தான் வெளியேறுவார் என நினைக்கிறேன் என்றதும் கமல் சரி கார்டையே பார்த்து சொல்லிவிடுகிறேன் என எவிக்‌ஷன் கார்டை கையில் எடுக்கும் பரபரப்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X