இனிமே என் கேம் என்னன்னு காட்டுறேன்.. அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தனலட்சுமி.. என்ன ஆகப் போகுதோ!
சென்னை: பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக கடந்த வாரம் மாறிய போதே ஏகப்பட்ட பஞ்சாயத்து கிளம்பின. இந்நிலையில், இந்த வாரம் நீதிமன்றமாகவே மாறி உள்ளது.
அமுதவாணன் விக்ரமன் மீதும், தனலட்சுமி தலைவராக நினைத்து முடியாமல் போனது குறித்தும் வழக்குகளை கொடுத்து வருகின்றனர்.
தனலட்சுமிக்கு வக்கீலாக ஆயிஷா ஆஜர் ஆன நிலையில், சாட்சியாக யாருமே ஆஜர் ஆகவில்லை என்று தெரிந்ததும் பொங்கி எழுந்து விட்டார் தனலட்சுமி.

பிக் பாஸ் நீதிமன்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில சீசன்களில் பிக் பாஸ் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 4வது சீசன் பிக் பாஸ் நீதிமன்ற காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கண் முன் வந்து செல்கிறது. இந்நிலையில், இந்த வாரம் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் நடப்பது கன்ஃபார்ம் என ரசிகர்கள் ஆர்வத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.

அமுதவாணன் வழக்கு
நீதிபதியாக ஏடிகே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விக்ரமன் மீது அமுதவாணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அசீம் அமுதவாணனுக்கு வழக்கறிஞராக மாறி உள்ளார். சும்மாவே அசீமுக்கும் விக்ரமனுக்கும் முட்டிக் கொள்ளும் இப்போ கோர்ட், கேஸ் சீன் என்பதால் வேறலெவல் என்டர்டெயின்மென்ட் வெயிட்டிங் என ரசிகர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார் பக்கம் ஒதுங்கி வருகின்றனர்.

பதவி ஆசை
தலைவி ஆவதற்கு முன்பாகவே தனலட்சுமி நான் தலைவியானால் அதை செய்வேன் இதை செய்வேன் என சீன் போட்ட நிலையில், அவர் தலைவி ஆகாமல் போன நிலையில், தனலட்சுமி ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அவருக்கு வக்கீலாக ஆயிஷா ஆஜர் ஆகி உள்ள காட்சிகள் 3வது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

மைனா, ஷிவின்
தனலட்சுமிக்கு ஐவிட்னஸாக மைனா நந்தினி, ஷிவின் ஆஜர் ஆக வேண்டும் என தனலட்சுமி கேட்டுக் கொண்ட நிலையில், இருவரும் முடியாது என ஒருவர் பின் ஒருவராக சொன்ன பின்னர் தனலட்சுமியின் முகமே மாறிவிட்டது.

இனி என் ஆட்டத்தை பார்ப்பீங்க
மைனா நந்தினி மற்றும் ஷிவின் தனலட்சுமி சார்பாக சாட்சி சொல்ல முடியாது என சொன்ன நிலையில், இனிமே என் ஆட்டத்தை பார்ப்பீங்க என தனலட்சுமி சவால் விடும் அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை நீங்க ஆடுன கேமே அப்படி இருந்ததே இனிமேல் எப்படி கேம் ஆடப் போறீங்க தனலட்சுமி என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எல்லாமே நடிப்பா தனா
வெளியே போறேன், வீட்டுக்குப் போறேன்.. அம்மாவை பார்க்கணும் அழுது அடம் பிடித்த தனாவா இப்போ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு இன்னும் ஒரு வாரம் உள்ளே இருக்க ஆசைப்படுகிறார் என ரசிகர்கள் பார்த்து வாயை பிளந்து.. அப்போ அதெல்லாம் நடிப்பா தனா என கலாய்த்து வருகின்றனர்.

எவிக்ட் பண்ணுங்க
தனலட்சுமி தொடர்ந்து மோசமான கேமை விளையாடி வருகிறார். தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றால், அடுத்த முறை போட்டிப் போட்டு ஜெயித்து தலைவராகணும் அதை விட்டுவிட்டு அதைப்பற்றியே பேசி வரும் தனாவை இந்த முறை எவிக்ட் பண்ணி வெளியே அனுப்புங்கப்பா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











