டைரக்டா தான் நாமினேட் பண்றேன்.. அழுகாச்சி மகேஸ்வரியை துவைத்து தொங்கப்போட்ட தனலட்சுமி!
சென்னை: மக்கள் போட்டியாளராக வந்த தனலட்சுமி ஆரம்பத்திலேயே ஜிபி முத்துவிடம் மோதி பிரபலமாகி விட்டார்.
தனலட்சுமியை வெளியே அனுப்புங்க என கம்பி சுத்திக்கிட்டு இருந்த ஜிபி முத்து ஆர்மி தலைவர் வெளியேறியதும் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இந்நிலையில், இந்த வாரம் ஏற்கனவே கடைசி இடத்தில் இருக்கும் மகேஸ்வரியை இன்னும் துவைத்து எடுத்தால் அவரே அழுது புலம்பி கிளம்பி விடுவார் என தனலட்சுமி டார்கெட் செய்து அடித்து ஆட ஆரம்பித்து விட்டார்.

விளையாட்டே வினையாகத்தான்
விளையாட்டு வினையாகிட போகுதுன்னு எச்சரிக்கை செய்வாங்க.. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் விளையாட்டுகளை வைப்பதே போட்டியாளர்கள் நடுவே சண்டை எழத்தான் என்பது அதை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். கடந்த சீசனில் இதே பொம்மை டாஸ்க்கில் அக்ஷரா மற்றும் சிபிக்கு இடையே வெடித்த சண்டையை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மகேஸ்வரி பொம்மை
தனலட்சுமி அலேக்காக மகேஸ்வரியின் பொம்மையை தூக்கிக் கொண்டு போய் அமர்ந்து விட்டார். என்னை அவுட்டாக்கத்தான் இப்படி பண்றியா என மகேஸ்வரி தனலட்சுமியிடம் கேட்க, இதுவொரு கேம் தானே என தனலட்சுமி விளக்கம் தருகிறார். ஆனால், அதை ஏற்க மறுக்காமல் வேண்டும் என்றே நீ செய்யுற என மகேஸ்வரி பேச ஆம் என தனலட்சுமி போட்ட ஒரே போடு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டைரக்ட் நாமினேஷன்
பர்சனல் விஷயத்துக்காக நீ பண்றேன்னு நல்லா தெரியுது என மகேஸ்வரி வாயை விட ஆமாம்.. நான் உன்னைத் தான் டைரக்ட் நாமினேஷன் பண்றேன் என தடலாடியாக தனலட்சுமி சொன்ன மூன்றாவது புரமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் கேமை நன்றாக புரிந்து கொண்டு தனலட்சுமி விளையாட ஆரம்பித்துள்ளார் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

முத்தம் கொடுத்த ஷிவின்
ஷிவினுக்கும் மகேஸ்வரிக்கும் இடையே சமீபத்தில் முட்டிக் கொண்ட நிலையில், தனலட்சுமி செய்த செயலை பார்த்து சந்தோஷப்பட்ட ஷிவின் தனலட்சுமியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் பலரும் தனலட்சுமியின் தைரியமான கேம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு மணி நேரம் அழுமே
அச்சச்சோ தனலட்சுமி வேற டைரக்ட் நாமினேஷன் எல்லாம் விஜே மகேஸ்வரியை பார்த்து சொல்லிவிட்ட நிலையில், இன்னைக்கும் மகேஸ்வரி ஒரு மணி நேரம் கேமராவை பார்த்து அழுமே 24 மணி நேரம் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் நிலைமை அந்தோ பரிதாபம் தான் என்றும் நக்கல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











