சத்தியமா நீ தள்ளல.. கேமராவில் நோட் ஆகியிருக்கும்.. மணிகண்டனை விளாசிய தனா.. இன்னொரு குறும்படமா?
சென்னை: தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளினார் என நீயும் பொம்மை டாஸ்க்கில் வெடித்த பிரச்சனைக்கு குறும்படம் போடப்பட்டு தனலட்சுமி தரப்பில் தப்பு இல்லை ஷெரினா தான் தனலட்சுமியை தள்ளிவிட்டார் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனலட்சுமியின் கையில் இருக்கும் பொருளை மணிகண்டன் பிடுங்கி அவரை கீழே தள்ளிவிட்டது அடுத்த பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது.
புதன்கிழமையே பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறிவிட்டதே என்றும் இன்னும் கொஞ்ச நாளில் அண்ணன் மணிகண்டன் திருந்தி இருக்கணும்னு தனலட்சுமியே சொல்வார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தனலட்சுமியும் சண்டையும்
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜிபி முத்துவை வைத்துத் தான் ஓடப் போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரை 2வது வாரமே அனுப்பி விட்டு தனலட்சுமியை வைத்து கடந்த சீசனில் தாமரையை வைத்து எப்படி கேம் நடந்ததோ அதே போல நடந்து கொண்டிருக்கிறது. டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி உடன் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளராக சண்டை போட்டு பிரபலமாகி வருகின்றனர்.

மணிகண்டன் சரியில்லை
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான மணிகண்டன் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் நடந்த பொம்மை டாஸ்க்கின் போது அசிங்கமான கெட்ட வார்த்தைகளை பேசியதாக பரபரப்பு கிளம்பியது. எந்தவொரு காரணமும் இன்றி தொடர்ந்து விக்ரமன் உடன் மல்லுக்கு நின்று வந்த மணிகண்டன் தற்போது தனாவிடம் சண்டை போட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் மணிகண்டன் செய்தது சரியே கிடையாது என விளாசி வருகின்றனர்.

தனாவை தள்ளிவிட்டு
தனாவின் கையில் இருந்த பொருளை பிடுங்கியது மட்டுமின்றி அவரை தள்ளிவிட்டும் ஒரு ஸாரி கூட கேட்காமல், தொடர்ந்து தனலட்சுமியுடன் நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சண்டை செய்ய எப்படி தான் மணிகண்டனுக்கு மனம் வந்தது என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர். அசீம் உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த சண்டையின் போது தனாவை அமைதி அடைய போராடியதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சத்தியமா நீ தள்ளிவிடல
அவன் இவன் சண்டை எல்லாம் முற்றி வாடா போடா சண்டை வரை பிக்பாஸ் வீட்டில் சர்வ சாதாரணமாகி விட்டது. நான் தள்ளி விடல, அவ கையில் இருந்ததை தான் எடுத்தேன் என மணிகண்டன் கத்தி சொல்ல, சத்தியமா நீ தள்ளிவிடல, கேமராலாம் நோட் பண்ணியிருக்கும் பொய் சொல்லாத என தனலட்சுமி புகுந்து விளையாடி உள்ளார்.

மொத்தமும் தூக்கிடுவேன்
கடையில் இருந்த பொருளை திருடவா என மணிகண்டன் கேட்க, முடிந்தா திருடி பாரு என தனலட்சுமி சவால் விடுகிறார். மொத்த கடையையும் தூக்கிடுவேன் என ஆவேசமாக மணிகண்டன் கத்தும் காட்சிகள் அடங்கிய 2வது புரமோ வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

இன்னொரு குறும்படமா
தனலட்சுமி பேசிய பேச்சை கேட்டதும் பிக் பாஸ் ரசிகர்கள் இன்னொரு குறும்படமா? ஆளவிடுங்க சாமி அதுதான் தெளிவா தனாவின் கையில் இருப்பதை மணிகண்டன் அவ்வளவு ஃபோர்ஸ் போட்டு புடுங்கியதும் அவர் விழுந்தார் என்பதை காண முடிகிறது. இதுக்கு குறும்படம் வேறு போடணுமா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











